Tuesday, November 21, 2006

மை(யல்) விழி

அஞ்ஞனம் கொண்ட விழியிரண்டும்
நெஞ்சினில் பாயுது
நெருப்புக் கணைகளாய்!

அஞ்சிடும் என் நெஞ்சு
காதலின் வீச்சு கண்டு!

வெஞ்சினம் கரையும்
ஒரு நொடிப் பார்வையில்
என் மனமோ உருகுது
அனலிடை மெழுகாய்!

காப்பாற்ற வரச்சொன்னால்
கரைக்க வருகிறாயே!
உன்னுள்ளே கரைத்துவிடு!
உயிருள்ளே சேர்த்துவிடு!

அன்புடன்,

நம்பி.பா.


--ஜூலை 18 2000-இல் எழுதியது.

4 comments:

சேதுக்கரசி said...

//அஞ்ஞனம் கொண்ட விழியிரண்டும்//

- புரியவில்லை. ஏன் அஞ்ஞானம் கொண்ட விழி? மற்றபடி நன்றாக இருக்கிறது.

நம்பி.பா. said...

சேதுக்கரசி,
தங்கள் வாழ்த்துக்கு நன்றி.

//அஞ்ஞனம் கொண்ட விழியிரண்டும்//
"அஞ்ஞனம்" என்றால் "கண்ணில் தீட்டும் மை";
"மை தீட்டிய உன் விழியிரண்டும் என் நெஞ்சினில்"
என்ற பொருளில் வரும்.

அன்புடன்,
நம்பி.பா.

சேதுக்கரசி said...

நல்லவேளை.. நான் அஞ்ஞானம் என்று நினைத்துத் தான் சந்தேகம் கேட்டேன்! :)

நம்பி.பா. said...

சேதுக்கரசி,
அடடா. அர்த்தமே மாறியிருக்கும்,
கவிதை காமெடியாயிருக்கும்,
பேருக்கு சொன்ன நெருப்பு உண்மையாகவே பறந்திருந்திருக்கும்!
உங்கள் மறுவரவிற்கு நன்றி.

அன்புடன்,
நம்பி.பா.