சிந்தனை என் தோழன்
தனிமை அதற்குப் பாதை
தனிமை எனக்கு இனிமை சில நேரங்களில்.
கேள்விகூடத் தோன்றுமெனக்கு
உறவு வந்தால் நாளை
என் செய்வேன் என் தனிமைக்கு?
வாழ்க்கையெனும் நாடகத்தில்
தனிமை கூட இரயில் சினேகமா?
உறவு கொணர்வது
வாழ்க்கைக்கு புதையல்தான்
அது தனிமைக்கு சுத்தியலாகலாமா?
எனக்கு மட்டுமல்ல உனக்கும்தான்!
புதிதாய் ஒரு சிந்தனை
வார விடுமுறைபோல்
மாதத்தில் சில நாள்
தனித்தனியாய் தனிமைக்கு
ஏன் அழைப்பு விடக்கூடாது?
தனிமை நம்
முழுமைக்கு வழிகாட்டியாயிற்றே!
அமைதிக்கு உற்ற தோழமையாயிற்றே!
புதிதாய்த் தான் வாழ்ந்து பார்ப்போமே!
உறவுக்கு தனிமை
உண்மைத் தோழனென்பதை
உணர முயல்வோம் நாம்!
வருவோம் நாம் உறவோடு
தனிமையையும் மகிழ்வையும்
காண்போம் நாம் வாழ்வாய்!
என்ன சொல்கிறாய் என் உறவே?
அன்புடன்,
நம்பி.பா.
பிகு. திருமணத்திற்கு முன்பிருந்த வீரத்தால் என்றோ எழுதியது.
5 comments:
Looks like wrote this poem after marriage.
May be due to "Anbu thoolaigal" from friends too.
Ithuthan Uravin Valiya?
illai sugamana sumaigal
//பிகு. திருமணத்திற்கு முன்பிருந்த வீரத்தால் என்றோ எழுதியது.//
அப்படி ஒன்னும் தோனலையே நம்பி..
எதோ வேதனையில் எழுதுன மாதிரியில்ல தோனுது.
-இவன்
ப்ரியா,
உங்கள் மறுமொழிகளுக்கு நன்றி.
//Looks like wrote this poem after marriage.
May be due to "Anbu thoolaigal" from friends too. //
அன்பு என்றைக்குமே தொல்லையாகாதென்று நினைக்கிறேன்,
நிச்சயமாக இது ரொம்ப நாளைக்கு முன்பு எழுதியது!
அதுதான் சொல்லியிருக்கிறேனே,
//திருமணத்திற்கு முன்பிருந்த வீரத்தால் என்றோ எழுதியது.// என்று!!
//Ithuthan Uravin Valiya?//
உறவு வலியாகிவிடக்கூடாது என்கிற நோக்கத்துக்கான சிந்தனைதான் இது!
அன்புடன்,
நம்பி.பா.
அய்யா "இவனே",
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.
அட, அதை நான் முன்னெச்சரிக்கையென்று நினைச்சிருந்தேன்,
உங்க மனசில பட்டதை சொல்லிட்டீங்க, அப்படியே எடுத்துக்கறேன்.
நீங்க சொன்னா நல்லதே நடக்குமென்று நினைக்கிறேன்.
அன்புடன்,
நம்பி.பா.
Post a Comment