Monday, November 24, 2008

அறிமுகம்

வலைப் பதிவர்கள் அனைவருக்கும் வணக்கம்!

என்னைப் பற்றி (அல்லது சுயதம்பட்டம் எனவும் சொல்லிக் கொள்ளலாம்)

பெயர் நம்பி, தொழில் மென்பொருள் துறையில்.


பிடித்தது, பிடிக்காததெனும் சார்பு நிலைகள்;-

தினம் மூழ்கிக் குளிப்பதனாலும் தாங்கிப் பிடிப்பதனாலும் முதலாளித்துவம் எனக்குப் பிடித்தல்ல; கண் முன்னே அதன் தவறுகளையும், தோல்விகளையும், தினம் வல்லாண்மையின் கைகள் அதனைப் பூசி மறைப்பது குறித்தும் நண்பர்களுடன் பேசிச் செல்வது மட்டுமுண்டு.

நுனிப்புல் மேய்வதால் இடதுசாரி என்று சொல்லிக் கொள்வதில்லை;
படிக்க வேண்டியதுவும் புரிந்து கொள்ள வேண்டியதுவும் அதிகமிருக்கிறது.

தினம் அணியாவிட்டாலும் கறுப்புச் சட்டை பிடிக்கும், ஆனால் தி.க. உறுப்பினரல்லன்.

தெள்ளிய தமிழில் தமிழரனைவரும் எழுதிப் படித்துப் பேசிடுதலென்பது ஆவல். தமிழ் பிடிக்கும், தமிழ் மட்டுமே பிடித்திருக்க வேண்டுமென்பதில் உடன்பாடில்லை.

மொழிக்குப் பதிலாய் வெறி பிடித்தவர்களின் அருகில் நிற்பதற்கில்லை,
மொழியை விற்றுப் பிழைக்கும் பெருந்தகைகளின் பெருத்த கைகளையும் காண்பதற்கில்லை.

மதமென்னும் பெயரில் பழக்க வழக்கங்களில் உட்கருத்தை மறந்து, மறுத்துச் சடங்குகளில் மட்டுமே தம் முகம் பார்க்கும் சனக்கூட்டம் முழுதாய் மாறும் நாள் பார்க்க ஆசை.

'சகுனம்' கற்றுக் கொள்வதற்கு முன்னர் 'அஹம் பிரம்மஸ்மி' அறிவராயின் தேசத்தில்
அன்பு கூடுமென்பதென் நம்பிக்கை.

மதம், தேசம், இனம், மொழி, வர்க்கமென்ற பெயரில் மனிதம் பிளந்து கிடப்பது பெருங்குற்றமென்பதுவும் இன்னொரு நம்பிக்கை.

நன்றி:-
மூன்றாண்டுகளுக்கு மேலாக எனக்குத் தமிழ்மணம் பழக்கமென்று அறிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி. பல மாற்றங்கள், சில பல சச்சரவுகளைக் கடந்து இன்றும் தமிழ் வலையுலகில் மிக முக்கிய பதிவுத் தொகுப்புத் தளமாகவும், புதுப் பதிவர்களுக்குப் பெரும் வழிகாட்டியாகவும் இருப்பது மறுக்க முடியாத உண்மை.

குடும்பம், வேலை மற்றும் நட்பு வட்டாரமெனும் தளங்களுக்குள்ளே சுழன்று கொண்டு, செய்திகளையும், பதிவுகளையும், தமிழ் நாட்டு (அரசியல்) நிகழ்வுகளையும், தமிழ்மணத்தையும் படிப்பதிலேயேயும் பெரிதும் காலம் தள்ளும் என்னை,
எப்போதோ ஓரு முறை வலைப்பதிக்கும் நிலையிலிருந்தும் நட்சத்திரப் பதிவராக அழைத்தமைக்கு தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு எனது நன்றிகள்!
அழைப்பின் தரத்தை காத்து, என்னால் இயன்றவரை தரமாக எழுத முயற்சிக்கிறேன்.

கண்டது, கேட்டது, படித்தது மற்றும் புரிந்தது குறித்து நான் மேலும் எழுத இந்த அழைப்பு பெரும் தூண்டுகோலாக இருக்கிறதென்பது உண்மை!
இதற்காய் என்னை மேலும் படிக்கத் தூண்டுவதற்கும் நன்றி.



13 comments:

குமரன் (Kumaran) said...

நட்சத்திர வாழ்த்துகள் நம்பி.

மோகன் காந்தி said...

வளரட்டும் உங்கள் தொண்டு

நம்பி.பா. said...

நன்றி குமரன் & மோகன் காந்தி.

Anonymous said...

இது எனக்கு சுயதம்பட்டமாக தெரியவில்லை. தெளிவான நல்ல அறிமுகம். வாழ்த்துக்கள்.

நம்பி.பா. said...

நன்றி நிலொபர் அன்பரசு உங்களின் வார்த்தைகளுக்கு.

தமிழ் said...

வாழ்த்துகள்

வடுவூர் குமார் said...

வாங்க வாங்க
நட்சத்திர வாழ்த்துக்கள்.

geevanathy said...

நட்சத்திர வாழ்த்துக்கள்.

தருமி said...

நட்சத்திர வாழ்த்துக்கள்.

நம்பி.பா. said...

நன்றி திகழ்மிளிர், வடுவூர் குமார், தமிழன்-கறுப்பி, தங்கராசா ஜீவராஜ் & தருமி அவர்களே உங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும்.

seik mohamed said...

நட்சத்திர வாழ்த்துக்கள்.

kannan said...

நம்பி அவர்களே,
ஒரு எழுத்தாளன் என்ற முறையில் உங்கள் படைப்புகளுக்கு தலை வணங்குகிறேன்...அரசியல் பற்றிய உங்கள் பார்வை புரட்சிகரமாய் உள்ளது...வாழ்த்துக்கள்..

நம்பி.பா. said...

நன்றி கண்ணன்!