கெவின் கார்ட்டர் - ஜூலை 27, 1994 - தனது தற்கொலைக் குறிப்பில் எழுதியது
"The pain of life overrides the joy to the point that joy does not exist" Kevin Carter 1960-, part of his suicide note
மெத்தனங்களின் மேற்கூரையில்
மனம் தினம்
செத்துத் செத்துப் பிழைக்கிறது
மனம் ஒரு வல்லூறாய்
நானும் ஒரு மிருகமென்பதை
தினம் நினைவூட்டுகிறது.
வெற்றிடங்களின் மாளிகை நிரப்ப
விருந்துகள் வேடிக்கைகள்
இருந்தும் என்றும் நிரம்பா மனங்கள்
கொண்டாட்டங்களின் ஆர்ப்பாட்டங்கள்
அள்ளாமல் குறையாமல்
போதை காக்க முயல்கின்றன
பொய்களி்ன் பித்தலாட்டங்கள்
பகல்களையும் இரவுகளையும்
நறுமணத்தில் தூக்கி நிறுத்த
மணம் குறையும் கணத்திலோ
{பொய்களின்} திரைகள்
கண்களுக்கும் சிந்தைக்கும் விருந்தாய்
மனமும் ஒரு வல்லூறாய்
தினம் நிற்கும் கணங்கள் தவிர
மற்றெல்லாம் நலமாகவே,
உலகெல்லாம் சுகமாகவே!!
பின்குறிப்பு-
கெவின் கார்ட்டர் செப்டம்பர் 13, 1960 - ஜூலை 27, 1994
1994ஆம் ஆண்டின் சிறந்த புகைப்படப் பத்திரிக்கையாளருக்கான புலிட்சர் பரிசு பெற்ற தொழில்முறை புகைப்படக் கலைஞரான கெவின் கார்ட்டர், தான் எடுத்த படங்களின் பாதிப்பினாலேயே பின் தற்கொலை செய்து கொண்டவர்.
1980களின் நடுவே, தென் ஆப்ரிக்காவின் உள்நாட்டுக் கலவரங்கள் தொடர்பான பல படங்களை எடுத்து அங்கே நிகழுவதை தான் பணியாற்றிய பத்திரிக்கை வழியாக உலகுக்கு காட்சியாக்கிய கெவின் கார்ட்டர், 1993இல் உள்நாட்டுக் கலவரம் மற்றும் வறட்சியினால் பாதிக்கப்பட்டிருந்த சூடான் நாட்டின் தென்பகுதிக்கு சென்று எடுத்த ஒரு புகைப்படம், உலகெங்கும் ஏற்படுத்திய அதிர்ச்சி அலைகளின் தொடர் விளைவே, பின்னாளில் கெவின் கார்ட்டரை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியது எனச் சொல்லலாம்.
தென் சூடானில், ஐக்கிய நாடுகள் அமைத்திருந்த உணவு முகாமை நோக்கி, குற்றுயிராய் தவழ்ந்து

ப்ளோரிடாவைச் சார்ந்த 'செயின்ட் பீட்டர்ஸ்பர்க்' எனும் ஒரு பத்திரிக்கை இந்த படம் பற்றி பின்வருமாறு எழுதியது. 'அந்தச் சிறுமி வதைபடுவதை முழுமையாக படமெடுப்பதற்காக, கேமராவின் லென்ஸை சரிசெய்தவர், இன்னொரு உயிர்க்கொல்லி மிருகமே, அவ்விடத்திலான இன்னொரு வல்லூறே'
The St. Petersburg Times in Florida said this of Carter: "The man adjusting his lens to take just the right frame of her suffering, might just as well be a predator, another vulture on the scene."
இந்த படம் மட்டுமல்லாமல் இது போன்ற பல படங்களையும் எடுத்த கெவின் கார்ட்டர், அவரது படங்களுக்கான எதிர்வினைகளும், அவரது வாழ்வில் நடந்த சில மாற்றங்களு
வாழ்க்கையின் வலி, மகிழ்ச்சிகளை மீறுவதோடல்லாமல் அவற்றை இல்லாமலேயே செய்துவிடுகிறது.
கெவின் கார்ட்டர் - ஜூலை 27, 1994
"The pain of life overrides the joy to the point that joy does not exist" Kevin Carter 1960-, part of his suicide note
கெவின் கார்ட்டர் மட்டுமல்ல, உண்மையில் நாமெல்லோருமே, நாளின் ஓரிரு கணங்களிலாவது அந்த வல்லூறாகவே இருக்கிறோம். அறிந்தோ அறியாமலோ அல்லது அறிய விரும்பாமலோ தனி உலகத்தில் தானெனும் சிந்தனையில், உலகின் நிகழ்வை, போக்கை, வலிகளை உணர மனம் தயாராயில்லாத நிலையில்தான் இருக்கிறோம்.
தொடர்புடைய இணைப்பு;-
http://en.wikipedia.org/wiki/Kevin_Carter
2 comments:
"
மெத்தனங்களின் மேற்கூரையில்
மனம் தினம்
செத்துத் செத்துப் பிழைக்கிறது
மனம் ஒரு வல்லூறாய்
நானும் ஒரு மிருகமென்பதை
தினம் நினைவூட்டுகிறது."
மிகச் சரியான வரிகளால் உண்மையை கவிதையாய் எழுதிருகிங்க. கவிதை என்று கொண்டால் ரசிக்க வைக்கிறது. உண்மை என்று கொண்டால் சுட்டெரிக்கிறது, நானும் அதனுள் அடங்குவதால்.
ப்ரியாகணேஷ்
வாங்க பிரியா - அந்த 'தினம் தினம்' நிகழ்விலிருந்து விலக நிறைய தெளிவு தேவைப்படும்போல தெரியுது, அதைத் தேடி என்னோட ஒரு சிறு முயற்சிதான் இந்த வரிகள்.
Post a Comment