Tuesday, April 28, 2009

காதலின் நீண்ட விழியசைப்பில்



காதலின் நீண்ட விழியசைப்பில்
நேற்றின் காத்திருப்புக்கள்
காற்றின் ஓட்டம்போல் ஓடிச்சென்றன.

எதிர்பார்ப்பின் எண்ண அதிர்வுகள்
இதயம் நிரப்பியென்
சிந்தனையின் வாசம் மொய்த்தன.

காட்சியின் பிழையில்
நிலவொன்று உலகின் ஓளியாய்
நிகழ்வுகளில் வந்து நின்றது.

புன்னகையின் இதழ் விரிப்புக்கள்
பாதையின் நெருஞ்சிகளை
நெஞ்சுக்குள் பூக்களாய் மாற்றின.

பதின்மத்தின் பசுமை நினைவுபோல்
ஏக்கத்தின் பசிகளுக்கும் என்
இயக்கத்துக்கும் காதல் துணையானது.

அன்பின் ஒரு வடிவம்தான் காதல்
ஆனால்
அதன் வீச்சோ ஆழமானது.

கவிதையின் ஒரு முகம்தான் காதல்
ஆனால்
அதன் பொருளோ என்றும் புதிதானது.


மேகப் படுகைகளின் மென்மைபோல்
கண் நின்று கணம் நிரப்பிப் பின்
மழையாய் நிற்பதுவாம் காதல்.


எண்ணம், வண்ணம், ஏக்கம்,
கவிதைகள், காத்திருப்புக்கள்
எல்லாமே பொய்யென்றாலும்
காதலென்பதென்னவோ என்றும்
மெய்யாய்த்தான் நெஞ்சில் இனிக்கிறது!

6 comments:

Anonymous said...

//"மேகப் படுகைகளின் மென்மைபோல்
கண் நின்று கணம் நிரப்பிப் பின்
மழையாய் நிற்பதுவாம் காதல்."//

very nice

theeeyai thagikka vaippathuvum
mezhuguvarthiyai urugavaipathuvum
kadhale!!!

kadhal illayel sadhale!!

Suresh said...

@ நம்பி.பா.

//சுரேஷ்,
உங்க பதிவுலக முயற்சிகளுக்கும் செயல்வேகத்துக்கும் வாழ்த்துக்கள்.//

நன்றி நன்பா :-)

//சரத்பாபு பற்றிய உங்க ஆர்வம் ரொம்ப நல்லாருக்கு ஆனால், தேர்தலுக்குப் பின்னால என்ன சொல்லப் போறீங்கன்னுதான் தெரியல.//

நன்பா அவர் டிபாஸ்ட் போணாலும் அவரும் சரி நானும் சரி வருந்த மாட்டேன் என் வெற்றி நிச்சியம் பதிவில் பாருங்கள்...

அவருடைய இந்த முயற்சி தான் வெற்றி, அவருடைய் பெயர் கிரமங்களில் தெரிந்தது ஒரு இளைஞனாய் அவர் ஒரு தீ கூச்சியை தான் பற்றி வைத்து இருக்கிறார் அதுவே வெற்றி..

அவரு கண்டிப்பா தேர்தலில் ஜெய்ப்பார் என்று யாரும் சொல்லவில்லை, எல்லாம் ஒரு நம்பிக்கை.. மாற்றம் வராதா என்று

// சரத்பாபு பதிவுகளெல்லாம் முதல் நாள் தமிழ் படம் பாக்கறமாதிரிதான் எனக்கு இருக்கு, சமூக நீதி, மத நல்லிணக்கம் பத்தியெல்லாம் அவரோட நிலை என்னன்னு கொஞ்சம் விளக்குங்க. இன்னொரு பதிவாவும் போடுங்களேன்?//

உங்க கேள்விகள் தாமதமய் இருந்தாலும் உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொருப்பு இருக்கு,
கண்டிப்பா ஒரு பதிவுல சொல்லுறேன்

Suresh said...

உங்க கவிதை அருமையா இருக்கு அதிலும்

/எண்ணம், வண்ணம், ஏக்கம்,
கவிதைகள், காத்திருப்புக்கள்
எல்லாமே பொய்யென்றாலும்
காதலென்பதென்னவோ என்றும்
மெய்யாய்த்தான் நெஞ்சில் இனிக்கிறது!...

இது அழகு

நம்பி.பா. said...

Anonymous - பதில் கவிதை நல்லாவே இருக்குது.

சுரேஷ் - உங்க மறுமொழிக்கு நன்றி - உங்க பதிவுக்கே வந்து பதிலிடறேன்!

Priya said...

"மேகப் படுகைகளின் மென்மைபோல்
கண் நின்று கணம் நிரப்பிப் பின்
மழையாய் நிற்பதுவாம் காதல்."

காதலின் பொருள் கண்டு நீங்கள் எழுதும் அணைத்து கவிதைகளும் மிக அருமை.

நம்பி.பா. said...

வாங்க பிரியா,

நன்றி வருகைக்கும், மறுமொழிக்கும். மத்த பதிவுகளைப் படிக்கும்போதும் மறுமொழி கொடுங்க, கருத்து குறித்து இல்லாவிட்டாலும், நடை குறித்து.