Saturday, April 19, 2008

கனவுகள் மட்டுமே சுகமாய்!

பதின்மத்தின் இருப்பிலும்,
அதன் நிழலிலும் மனம் நின்றிருந்தபோதெல்லாம்
கரையில் காலைத் தொட்டுச் சென்ற
கடல் நீரலைகள் நெஞ்சை நனைக்கும்;
தோட்டத்தில் மரத்தை தழுவிச் சென்ற
மாலைக் காற்று மனதை நிறைக்கும்;
காத்திருப்பின் கணப்பொழுதில்
கடிகாரத்தின் நொடிமுள் நகராமல் நிற்கும்;
சூரியனின் தொடலுக்காய் காத்திருக்கும்
அடிவானம் மனதில் அழகிய கோலமிடும்;

காலத்தின் ஓட்டம் வயதைக் கூட்டும்,
சிந்தனையின் ஓட்டம் பாரத்தைக் கூட்டும்;
இப்போதெல்லாம்
காலைத் தொட்டுச் சென்ற அன்றின்
கடல் நீரலைகள் எங்கே போனதுவோ?

நொடிமுள் காணவில்லை
கடிகாரம் தேவைப்படுவதில்லை ஆனாலும்
வருடங்கள் வேகமாய் ஓடுகின்றன;
உதிப்பதுவும் மறைவதுவும்
சுவாசத்தைப்போல் சிந்தையில் நிற்பதில்லை!

கேள்விகளின் துவக்கம்
பதிலில் முடியாமல்
சிந்தனையில் பந்தடித்து
உறக்கத்தின் துவக்கத்தை தடுத்து நிறுத்தும்;

அறிதலிலும் கற்றலிலும்
அமைதி மட்டும் ஒளியாண்டுத் தொலைவில்!
ஆனாலும் அறிவு சுட்டுக்கொண்டேயிருக்கிறது!

பதின்மம் தாண்டிப் போனது உண்மை,
உண்மையும் அறிவும் தாண்டிப் போமா?
இங்கே கனவுகள் மட்டுமே சுகமாய் இலவசமாய்,
சிந்திக்காத நேரத்தில் வாழ்க்கையும் சுகமாய்;

----------------------
பதின்மம் - பதிமூன்று முதல் பத்தொன்பது வரையிலான விடலைப் பருவம் (Teen Age)

ஒளியாண்டுத் தொலைவு - ஒளியானது வெற்றிடத்தில் ஒரு நொடிப்பொழுதில் 299,792,458 மீட்டர் பயணம் செல்லும், ஒரு ஆண்டுக்காலத்தில் 9,460,730,472,580.800 கி.மீ. பயணம் செல்லும் (தொண்ணூற்றி நாலாயிரம் கோடியே சொச்சம் மைல்கள்), ஒப்பீட்டு அளவில் மிக மிக அதிக தூரம்.
----------------------

4 comments:

Anonymous said...

Dear Kanavu Vanam Author,
Gnapagam Gnapagam Varuthe
Engalathu Pathimam iruppu
Gnapagam Varuthe,
Nalaiya suriyan en vilikiran enru
Kavalai Padamal, Enru Uthitha Suriyana Oliye ye mattume rasithu Parthom.

Nalai Suriyanani vidiyalalil nam enna seeya pogirom ennum pothu
Nammai Thottu senra Kadal Neeraligal, Nammai Thottu Senra Malai Katru, ellame suriyan malai nera oliyodu maranthu senrathu.

Nalaya poluthu nalla padi nadakkum ena, enraya poluthai rasippavan enrum manathal pathinmathil than ullan. evan oru ragam

unathu pathinmathil nee rasaithye vida pala madangu santhosam un nigal kalathil ullathu - ethai rasaippavan oru ragam.

enathi pathinmam poyivittathu ena nigal kalathil ullaviyum rasaikkamal valum makkal oru ragam.

unathu kavithe enathu pathinmathe nenivu paduthiyathu, ananl enathu nigal kalathil nigalvukalai rasikka vaithathu, enathu varun kala nigalvukali thangum mana valimiye koduthathu.

evan

um kavithiye virumbum rasigan

Anonymous said...

நீங்கள் கூறும்
இப்போதய நம்---

கனவுகள் மரயாது காலங்கள் சென்றாள்,
நினேவுகள் மறக்காது நெஞ்சம் இருந்தால்,
நிம்மதி கொஞ்சம் நம் வாழ்வில் இருக்கும்.

நம்பி.பா. said...

ஓ ரசிக சீமானே,

விளக்கமாக கருத்தைப் பதிந்தமைக்கு நன்றி, உங்கள் பதிலே என் கவிதைபோல் ஒரு கவிதை முயற்சியாய்த்தான் எனக்குத் தெரிகிறது!
//சிந்திக்காத நேரத்தில் வாழ்க்கையும் சுகமாய்// இந்த வரிகள் தான் இந்தக் கவிதையின் கரு, பதின்மம் அறியும்/அறியாப் பருவத்தைக் சுட்டிக்காட்டும் ஒரு குறியீடு.
பெயரைத் தந்து உங்கள் கருத்தை அடுத்த முறை பதிவீர்களென நம்புகிறேன்!

நம்பி.பா. said...

பிரியா-கணேஷ்,
நிச்சயம் நிச்சயம் நிம்மதி நம் வாழ்வில் கொஞ்சம் இருக்கும், நன்றி உங்கள் வருகைக்கும் ஊக்க வரிக் கவிதைக்கும்!