Friday, July 13, 2007

ஆனந்தக் களி நடம் - அன்புடன் போட்டிக்கான கவிதை முயற்சி-1

ஓரிரு மாத இடைவெளிக்குப் பின் எழுத
நேரம் கிட்டியிருக்கிறது, கடந்த ஏப்ரல் மாதம் நடந்த
"அன்புடன்" குழுவினர் நடத்திய கவிதைப் போட்டியில்
இரு படங்களுக்காக நான் எழுதிய கவிதைகள் இதோ!



எனது கவிதைகள் பரிசுப் பட்டியலில்
இடம்பெறவில்லையெனினும், மிகச்சிறந்த கவிதைகளுக்கு
அளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி!


போட்டியை திறம்பட நடத்தி, முக்கியமாக, நேரத்தையும்
சிந்தனையயும் பயனுற செலவிட்டு, போட்டிகளை
நடத்திய குழுவினருக்கு எனது நன்றி! வாழ்த்துக்கள்!


இரு படங்களுக்காக எழுதிய மூன்று கவிதைகளில்
முதலாவது! கவிதைக்கான படமும் இணைத்துள்ளேன்.


ஆனந்தக் களி நடம்
---------------------------
இந்தச் சிறுமியின்

கண்களில் எத்தனை நட்சத்திரங்கள்,
காலையின் வெளிச்சம்
இவளின் முகத்தில் பிரகாசமாய்.

ஆடையின் வண்ணங்கள்
ஆனந்தம் தவிர வேறேதும் பேசவில்லை!
பார்வையின் கவர்ச்சி காட்டுது
அப்பழுக்கற்ற உண்மையை!

அமைதியின் பார்வை
இவளின் பார்வை;
ஆனந்தக் களிநடம்
இவளின் முகம்;

அலையறு நடுக்கடலின் அமைதி
இந்த முகத்தைக் காணக் காண!
இவள் காலங்கள் கடந்த
நம் கலாச்சாரத்தின் வடிவமா?
பூக்கள் தோற்கும்
இந்த மழலை முகம் கண்டு!
வாடாமல் காப்பது
உலகின் கடமையன்றோ?


குழையும் மனது
மழலையின் வெகுளிப் புன்னகையில்,
இது புன்னகையா? சிரிப்பா?
கேள்வியில் மயங்குதென் மனம்!
---------------------------14 ஏப்ரல் 2007------

8 comments:

சேதுக்கரசி said...

பங்கேற்பதே பெரிய விசயம்.. வாழ்த்துக்கள் நம்பி!

//அலையறு நடுக்கடலின் அமைதி
இந்த முகத்தைக் காணக் காண!
இவள் காலங்கள் கடந்த
நம் கலாச்சாரத்தின் வடிவமா?
பூக்கள் தோற்கும்
இந்த மழலை முகம் கண்டு!
வாடாமல் காப்பது
உலகின் கடமையன்றோ?//

பிடித்த வரிகள்!

அப்புறம்.. நீங்கள் தொடுப்பு கொடுத்த பக்கம் not found என்கிறது. http://groups.google.com/group/anbudan/web இந்தப் பக்கத்துக்குத் தொடுப்பு கொடுக்கவும்.. நன்றி.

நம்பி.பா. said...

நன்றி சேதுக்கரசி, அன்புடனுக்கான தொடுப்பை சரிசெய்துவிட்டேன்!

பதித்த மறுகணமே வந்திருக்கும் உங்கள் மறுமொழி கண்டு ஒருகணம் திகைத்துவிட்டேன்!!

சேதுக்கரசி said...

ஏதோ அந்த நேரம் (மட்டும்) சும்மா உக்காந்துட்டிருந்திருக்கேன் போலிருக்கு ;-)

நம்பி.பா. said...

சேதுக்கரசி,
சும்மா (மௌனமாய்) இருத்தல் உங்களுக்கு கைவராதென்பது அன்புடன் மடலாடற்குழுவில் நானறிந்ததாய் எண்ணம்!

priya said...

Nice Photo! At the same time while lookind at small children like that girl in the picture, always I get a question in my mind asking that "How are we going to give assurance for their happiness for ever? How are we going to protect them to keep their innocense? from the contemporary world"

Nicely and precisely written dynamic poem!!!

நம்பி.பா. said...

நன்றி பிரியா வருகைக்கும் மறுமொழிக்கும்!
நிச்சயம் அந்தப் பிஞ்சைக்(குழந்தைகளைக்) காப்பது பற்றிய கேள்விகள்தான் எனக்கும் எண்ணத்தில் வந்தது!

இவன் said...

நம்பி அருமையான கவிதை. மேலும் எழுத வாழ்த்துக்கள்.

நம்பி.பா. said...

நன்றி "இவனே", வருகைக்கும் வாழ்த்துக்கும்!