அருகில் வராதே!
கைகோர்த்து கரை நடந்து
கால் நனைந்தது போதாதென்று
மழை கொண்டு
முழுதாய் நனைந்தது
நிழலாடுது நெஞ்சிலின்றும்!
நாட்களென்னவோ வரிசையாய்
நாட்காட்டியிலிருந்து
குப்பைத் தொட்டிக்கு;
நீயென்னவோ இன்னமும்
கண்ணுக்கு கானலாய்தான்!
காதலில் பிரிவென்னும் துயரன்றி
பெருந்துயர் வேறேது?
தென்றலாய் உடனிருந்தபோது
பற்றிய தீயில்
இன்னும் எரிகிறேன்
தயவுசெய்து அருகில் வராதே!
அன்புடன்,
நம்பி. பா.
8 comments:
//பற்றிய தீயில்
இன்னும் எரிகிறேன்
தயவுசெய்து அருகில் வராதே!\\
என்ன நம்பி, பிரிவு என்று ஒன்று வந்தபிறகு சேர்கை என்பது சாத்தியம் இல்லையோ?
எனக்கு மற்றும்மொரு கவிதை நாபகத்துக்கு வருகிறது.
சிறு பிரிவெல்லாம் பிரிவென்றால்!
நட்பெல்லாம் நட்பா ?
கதாலும் ஒருவகை நட்புதானே?
நன்றி இவனே, வருகைக்கும் கருத்துக்கும்! பிரிவென்பதே சேர்க்கையொன்றை எதிர்பார்த்துத்தான் என்றாலும், பிரிவின் கோபத்தின் வேகத்தில் வந்த வார்த்தைகளாகப் பாருங்களேன்!
Nambi - I could relate to emotions shared in this poem as I am living a solitary life far away from my love for past 2 months. In this cold weather in the NorthWest your poem gives some warmth :-)
nandri, Nambi!
-Sekar
சேகர்,
உங்க சோகத்துக்கு இந்த கவிதை கொஞ்சம் இடம் கொடுத்திருந்தால்
மன்னிக்கவும், சூடா ஓரு ஸ்டார்பக்ஸ்
காபி சாப்பிட்டா உடனடி மற்றும் தற்காலிக நிவாரணம் கிடைக்காதா?
நன்றி உங்கள் வருகைக்கு, உங்க தகவலை ஊருக்கு சொல்லி அனுப்புகிறேன்!
நல்லா இருக்கு நம்பி...
சேதுக்கரசி,
உங்கள் பாராட்டுக்கு நன்றி.
நன்றாக இருக்கிறது நம்பி அண்ணே!
(நம்பி அண்ணே என்று அழைக்கும்போது ஏனோ "அரங்கேற்ற வேளை" திரைப்படம் நினைவுக்கு வந்து தொலைக்கிறது)
நன்றி நாமக்கல் சிபி அவர்களே, அரங்கேற்ற வேளை நம்பி அண்ணன் அளவுக்கு சிரிக்கவைக்கும் திறன் எனக்கில்லை என்பது பெருங்குறையாக இருக்காதென்று நினைக்கிறேன்.
Post a Comment