Friday, January 12, 2007

சாதி, இந்து மதம் மற்றும் நாளை!

இந்த பதிவு, மாற்றம் நம் மனதிலிருந்து துவங்க வேண்டுமென்ற
கருத்தை அடிப்படையாகக் கொண்டது.

சாதிப் பிரச்சினை, இந்து மதத்திற்கே உரிய பெரும் பிரச்சினை,
கால மாற்றத்தில், தகவல் பரிமாற்றத்தின் வளர்ச்சியில் இன்று
முன்னிலும் பெரிதாய் பேசப்படுவது; சில பத்தாண்டுகளுக்கு
முன்பிருந்த வாழ்நிலையை விட இன்றின் இந்தியாவில்
இது குறித்து பெரு முன்னேற்றமும் விழிப்பும் ஏற்பட்டுள்ளது!
மனு தர்மம் மற்றும் வர்ணாசிரமம் இவையிரண்டும்தான் இந்த
சாதிப் பிரச்சினைக்கு பெருங்காரணிகளாய் இருக்கின்றன.

பெரியார் போன்றவர்களின் பெருமுயற்சியால், தமிழகத்தின்
இன்றைய நிலை மற்ற பல வட மாநிலங்களைவிட பெரிதும்
சாதிப் பிரச்சினையில் முன்னேறியிருந்தாலும், இந்திய தேசத்தின்
ஒவ்வொரு துளி நிலத்திலிருந்தும் சாதியைப் போக்காமல்,
மனிதர்கள் மனிதர்களாய் இருப்பதுவும் நடத்தப்படுவதுவும் இயலாத
ஒன்று!

பிஞ்சுகளின் மனதிலும் நஞ்சை விதைக்கும் இந்த சாதி வேற்றுமையை
சமுதாயத்திலிருந்து முற்றிலும் களைய வேண்டும். ஆக்கமான
முயற்சிகளை அனைவரும் எடுப்பதே இதை அடுத்த
பத்தாண்டுகளிலாவது மக்கள் மனதிலிருந்து போக்குவதற்கான ஒரே வழி.

இன்றைக்கு இருக்கும் தலைமுறையையோ, உடன் பேசிப்
பழகுபவர்களையோ இதற்கு குறைகாட்டி எழுதுவதில் இந்தப்
பிரச்சினை தீராது. உடலின் எல்லா நோய்களுக்கும் ஒரே நாளில் ஒரே
நேரத்தில் மருந்தளிக்க முடியாது, ஒவ்வொன்றாய்த் தான் கவனிக்க
வேண்டும்.

வேதம் படித்தவர்கள், சாதி வேற்றுமை வேதத்தில் இல்லவே இல்லை,
காலத்தின் போக்கில் சிலரின் வாழ்வு முறைத் தேவைக்காக
ஏற்படுத்தப்பட்டதே இந்த நாற்சாதி (வர்ணாசிரம சதுர்வர்ணம்)
முறை என்று சொல்கின்றனர், உங்களுக்கு அறிந்த உண்மையை
ஊருக்கு எடுத்துச் சொல்லுங்களேன்!

கண்முன்னே, நம்போல் இன்னொருவரை தாழ்த்தவோ உயர்த்தவோ
செய்தல் பெருங்குற்றமென்பதை ஏற்கனவே அரசியல் சட்டம்
பேசிவிட்டாலும், ஒவ்வொரு இந்து மதத் தலைவரும் வெளிப்படையாய்
இது குறித்து மக்களிடம் நேரிடையாய் பேசாமல் இந்த குறையை
போக்க முடியாது.

ஒவ்வொரு அலுவலகம், பள்ளி மற்றும் பொது இடத்திலும்
"தீண்டாமை பெருங்குற்றம்" என அறிவிப்பு பலகை இருப்பது போதாது.
ஒவ்வொரு கோயிலிலும். ஒவ்வொரு கோயில் கதவிலும் அதை
எழுதி வைப்பதுவும், கோயில் பணியாளர்கள் ஒவ்வொருவரும்
இது குறித்த உறுதிமொழியை மாதம் ஒரு முறை எடுக்கச் செய்தல்
வேண்டும்.

வேதம் பெரிதென்று எண்ணினால், வேதத்தில் சாதி பேதம்
இல்லையென்றும், பிறப்பால் அனைவரும் சமம் எடுத்துச் சொல்ல
இந்து மதத் தலைவர்கள், மத விற்பன்னர்கள் அனைவரும்
முன்வருவார்களா?


இதற்கு தயாராகாவிட்டால், இன்றில் வழக்கிலிருக்கும் இந்து மதம்
நாளை இருக்குமா? நிச்சயம் இருக்காது!!

காலத்தின் தேவைக்கும், சக மனிதர்களின் மனிதத்திற்கும், உணர்வுக்கும்
உரிமைக்கும் இடங்கொடாத எதற்கும், காலம் இடங்கொடாதென்பது
யாவருமறிந்த உண்மை!


பிகு. செல்வன் அவர்கள் எழுதிய வலைப்பதிவின் தாக்கத்தால்
எழுதியது,
அவரின் பதிவு: http://holyox.blogspot.com/2007/01/227.html

22 comments:

செல்வன் said...

நன்றி நம்பி,

இந்துவாக பிறந்த ஒவ்வொருவரும் இந்த இழிவை அகற்ற முன்வர வேண்டும் .வறுமையிலும், ஒடுக்கப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் வாழும் மக்கள் அனைவரையும் கைதூக்கி விடுவது நம் ஒவ்வொருவரின் கடமை.மேல்தட்டு இந்தியன் ஒவ்வொருவனும் அடித்தட்டு மக்கள் ஒருவரை கைதூக்கி விட்டால் இன்னும் இரு தலைமுறைகளில் இந்தியாவில் ஜாதியும், வறுமையும் அழிந்துவிடும்.

நாடு முழுக்க இதை செய்யாது போனாலும், முடிந்தோர் அனைவரும் இதை செய்ய துவங்கலாம்.

நம்பி.பா. said...

நன்றி செல்வன்,

ஊர் கூடி தேர் இழுப்போம், தேர் சரியில்லையென்றால்
ஊர் கூடி தேரை சரி செய்வோம், ஆக்கத்தின் மூலமாய்த்தான்
இந்த உலகை நாம் உலகாய் காணமுடியும்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வென்றே பாரதி சொன்னது
உண்மையே, நம்மில் உயர்வு தாழ்வு காண்கையில் உயர்விங்கே
கைக்கெட்டாமல்தான் இருக்கும்.

கால்கரி சிவா said...

//வேதம் பெரிதென்று எண்ணினால், வேதத்தில் சாதி பேதம்
இல்லையென்றும், பிறப்பால் அனைவரும் சமம் எடுத்துச் சொல்ல
இந்து மதத் தலைவர்கள், மத விற்பன்னர்கள் அனைவரும்
முன்வருவார்களா?//

ஆண்டாண்டு காலமாக சொல்லிதான் வருகிறார்கள். அரசியல்வாதிகள்தான் காதில் வாங்கி கொள்ளாமல் பிரித்தாள்கின்றனர்.

கூடிவாழ்வோம் கோடி நன்மைகளை பெறுவோம்.

நம்பி.பா. said...

நன்றி சிவா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

அரசியல்வாதிகளுக்கு தேவை வேறு, ஓட்டுக்காக
எது வேண்டுமானாலும் செய்வர், குற்றம் நாடுதல் அவர் போக்கு.
மதத் தலைவர்களும் மதப் பெரியவர்களும் இதுபற்றி
வெளிப்படையாக பேசுவதும் குறை களைவதும் மட்டுமே
இதில் உதவுமென்று நினைக்கிறேன்.

Anonymous said...

நம்பி,

தங்கள் கருத்தை வரவேற்கிறேன் !

சாதி பேதத்தை நம்முடைய மக்கள் ஊருக்கு உபதேசமாகப் பார்க்கிறார்களே ஒழிய, தனி ஒருவனுக்கு என்று வரும்பொழுது அவன் அதை ஏற்கத் தயங்குகிறான் ! சாதி பேதம் இல்லையென்பது ஒவ்வொருவருக்குள் இருந்தும் வெளிப்பட வேண்டும் !

தாங்கள் கூறியது போல், அனைவரும் சமம் என்பதை இந்து மதத் தலைவர்கள் மற்றும் மதத் தலைவர்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்களும் கூற முன்வருவார்களா ?

அன்று, பெரியார் போன்ற அரசியல் தலைவர்கள் சாதி பேதத்தை ஒழிக்கப் போராடினார்கள் ... ஆனால், இன்றைய நிலை அப்படியா ???

இல்லை........................................!!!

சாதி என்பது இன்றைய அரசியல்வாதிகளுக்கு வோட்டு வங்கி ! இந்நிலை மாறுமா ??

மாறுமென்று நினைப்போம்... இல்லையெனில், தாங்கள் கூறியது போல் "இந்து மதம் நாளை இருக்குமா?"

கருத்தினைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி !

அன்புடன்
கோபி

Anonymous said...

தயவு செய்து, மற்ற மதங்களின் செயல்களைக் குறைத்து மதிப்பிடும், பழிக்கும் பதிவுகளை இடாமல் இருக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

"அவனை முதலில் நிறுத்தச் சொல்" எனும் வழக்கமான பல்லவியைப் பாடாமல், அனைவரும்....அனத்து மதத்தினரும்... இதனைச் செய்தால் மட்டுமே போதும்.... மத நல்லிணக்கம் வளர!

இந்தியா போன்ற பல மதங்களும், பல்வேறு காலகட்டத்தில் ஆளுகை புரிந்த நாடுகளில் ஒவ்வொரு சமயங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றிருப்பது ஒரு தவிர்க்கப்பட முடியாத செயல் என்பதை அனைவரும் புரிந்து, இவற்றைப் பெருந்தன்மையுடன் ஒதுக்க வேண்டுமாய் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

Anonymous said...

இந்த சாதிவெறி ஒழிந்தால் உங்களுக்கு அறைப்பதற்கு ஒன்றுமில்லை என்பதாலா இந்த ஆட்டம்?

இது ஒரு சாதியமயமாக்கும் பதிவு. சாதிவெறியை மீண்டும் மீண்டும் சொல்லி உணமையாக்க முனையும் உங்களைப் போன்ற நபர்களை அப்பாவி இந்தியர்கள் அடையாளம் காண வேண்டும்.

நம்பி.பா. said...

கோபி,
உங்கள் வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி,
வோட்டு தேடும் தொழிலில் குறியாக உள்ள
அரசியல் தலைவர்கள் யாரும் இது குறித்து
பெரிதாய் கண்டுகொள்ளப்போவதில்லை.

இந்து மதத்தவர்கள் மட்டுமல்ல, எனக்குத்
தெரிந்து, கிறித்துவ மதத்திற்கு மாறியும் சாதி அடையாளத்தினை
காத்து வருபவர்களும் தங்களை மாற்றிக் கொள்ள முன்வரவேண்டும்.

Anonymous 1.
உங்கள் கருத்தை வரவேற்கிறேன், ஆனால் சாதி பற்றி
பேசாமலேயே அதை தீர்க்க முடியாதே? தவிர்க்க
முடியாத செயல் என்று ஒதுங்கிவிடல் அறிவிற்கு
ஏற்புடையதல்லவே!

Anonymous 2.
இந்த சாதியினால் வந்த பேதம் போனால், அடுத்த
பேதத்தினை பற்றி பேசித்தான் ஆக வேண்டும்!
அப்பாவி இந்தியர்களின் ஒரு முக்கிய அவசர தேவைதான்
சம உரிமை, சரிதானே?

நீலகண்டன் said...

//வேதம் படித்தவர்கள், சாதி வேற்றுமை வேதத்தில் இல்லவே இல்லை,
காலத்தின் போக்கில் சிலரின் வாழ்வு முறைத் தேவைக்காக
ஏற்படுத்தப்பட்டதே இந்த நாற்சாதி (வர்ணாசிரம சதுர்வர்ணம்)
முறை என்று சொல்கின்றனர், உங்களுக்கு அறிந்த உண்மையை
ஊருக்கு எடுத்துச் சொல்லுங்களேன்!//
இதனை விசுவ இந்து பரிஷத் செய்து வருகிறது. விரும்புகிற அனைவருக்கும் பூணூல் அணிவித்து அந்தணர்களாக்கி வருகிறது. உடனே 'என்றால் அவர்கள் காஞ்சி சங்கராச்சாரியார் ஆக முடியுமா?' என கேட்பவர்களுக்கு, சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் சான்றோர் சாதியை சேர்ந்த பலர் அந்தணர்களாக்கப்பட்டது குறித்து மார்க்சிய அறிஞர் தோத்தாத்ரி எழுதியுள்ளார். அவர்கள் வழித்தோன்றல்கள் எத்தனை பேர் இன்று ஜீயர்கள் ஆகியுள்ளனரோ தெரியாது. ஒரிசாவில் ஒரு கோவிலில் தலித்துகள் நுழையக்கூடாது.இது இருநூறு வருடங்கள் உள்ள வழிமுறையாம். அங்கே தலித்துகள் வெளியே நின்று பார்க்க ஒரு பலகணி சுவரையும் கட்டியுள்ளார்களாம். இது குறித்த செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. ஆனால் விசுவ இந்து பரிஷத்தின் அசோக் சிங்கல் பரிஷத் தொண்டர்களுடன் அந்த சுவரை உடைக்க கிளம்பினார் - தலித்துகளின் வழிபாட்டுரிமையைக் கோரி. என்ன அதிசயம் அந்த செய்தி மட்டும் வரவேயில்லை. சாதி இன்றைக்கு அரசியல்வியாதிகளால் வாழ்கிறது. இந்து தருமத்தலைவர்கள் செய்யும் பிரயத்தனங்கள் ஏனோ ஊடக ஒளியை பெறுவதில்லை. இந்தியாவை சூழும் பயங்கரவாத இருளுக்கு எதிராக இந்துக்கள் தங்களிடையே உள்ள சாதீயத்தை முழுமையாக அழிக்க வேண்டும். கண்ணுக்கு தெரியாத பிராம்மணீயத்தின் மீது பழி போற்று தப்பித்துக்கொள்ளும் முற்போக்கு பாவ்லாக்களை அகற்றி நேர்மையாக இந்த பிரச்சனையை எதிர் கொள்வது அவசியம். அனைத்து பீடாதிபதிகளும் தமது மடங்களில் சாதி வித்தியாசமின்றி தகுதிவாய்ந்த இந்துக்களை பீடவாரிசுகளாக நியமிக்க வேண்டும். ஒரு வேளை உடனடி சாத்தியம் இல்லாதிருப்பின் குறைந்த பட்சம் கோட்பாட்டு ரீதியாக இதற்கு உடன்பட வேணும். இந்து கோவில் சொத்துக்கள் இந்து சமுதாயத்தின் நலிந்த பிரிவினருக்கு வாழ வழி செய்யும் விதத்தில் பயன்படுத்தப்பட வேண்டும். இதையெல்லாம் செய்ய இந்துத்வவாதிகள் பெரும் சக்தியாக பாரதமெங்கும் மலரவேணும். இதனை நீங்களும் நானும் ஒவ்வொரு இந்துவும் செய்ய வேண்டும்.

Humanly said...

Well, took a lot of time to read your post and read it on my own, FULLY !

I totally understand your plight. Living being inequality exists, both physically and mentally right from birth, UNFORTUNATELY, that is how nature has created. Not just with humans, any living being for that matter has inequality right from birth. Two tigers born to the same mother at the same birth have a lot of differences between them, the same is true with plants too. We need to understand and accept that and work constructively towards that.

On top of it we as humans add more divisions and sub-divisons to it in many ways like region, religion, language, caste, creed, etc. Religion is just one among the human added inequality. The CASTE system applies to ALL religions not just Hindu religion. Statistics shows that there have been more deaths and more chaos due to religious sub-divisions(what we call 'Jaathi' in tamil) in Muslim religion than any other religion. There have been chaos and deaths in Christian religion due to the same sub-divisons and in Hindu religion too. That being the case I do not agree with your title even a bit. NOT because you have written about Hindu religion, I would have disagreed it with the same intensity had you put any other religion too. If you eliminate religion/sub-divisions from this world, humans will still fight for land, eliminate boundaries, they will fight for language or some other reason. The blame should not be on Religion alone, it is just the human mind. Religion is just one parameter there are innumerable such parameters that we human’s have been fighting. Religion was formed to put people in the right path, it has nothing to do with the happenings, it is just the people's way of interpretation. People like Periyaar had good thoughts in their mind, but their way of execution was totally flawed and utterly failed. People like him wanted to do good things and end up doing it fanatically (I see him no different from those stupid religious leaders).

However, there are a lot many good things in your contents, like the next ten years we should work towards human growth, very valuable point, not just next ten years, it has to be a continuous process. I overwhelmingly agree to those good points and EMPHASIS SHOULD BE GIVEN TO SUCH POINTS.

Bottom Line: Some people/group of people have taken religion personally and have fundamentally fought FOR it and hurt a lot others in the process. It is not fair to consider just those people/group of people alone and fight against any particular religion and hurt people who follow it constructively. Religions are beyond that, they are like law MEANT to take people in the right path. As a friend my request to you is, please do not take any religion’s name in particular (there are a lot of people who follow it in a constructive way), you are offending them(I know unintentionally) in the same category as the people who follow it fundamentally, let us differentiate us from them. I would have been very pleased had your TITLE and CONTENTS had a emphasis on different things that have been told lightly !!!!!

நம்பி.பா. said...

நீலகண்டன்,
உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி.

//பலர் அந்தணர்களாக்கப்பட்டது குறித்து மார்க்சிய அறிஞர் தோத்தாத்ரி எழுதியுள்ளார்//
இது குறித்து மேலதிக தகவல்கள் இருந்தால் தாருங்களேன்.
//அனைத்து பீடாதிபதிகளும் தமது மடங்களில் சாதி வித்தியாசமின்றி தகுதிவாய்ந்த இந்துக்களை பீடவாரிசுகளாக// இது போன்ற நிகழ்வுகள் உண்மையாகவே நடக்கத் துவங்கினால்... நிச்சயம் வரவேற்கத்தக்கது.

Thamizhan said...

சாதியை மூடி வைத்திருந்த காலம் போய் ஒழிக்க வேண்டிய காலத்தின் கட்டாயம் வந்து விட்டது.
அய்க்கிய நாட்டுச் சபையிலே சாதிப்பிரச்சினைப் பற்றிய தர்க்கம் வந்துவிட்டது.இனி அது இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை என்றுமூடி மறைக்க முடியாது.
முதலில் அரசியல் ச்ட்டத்த்லே"தீண்டாமை" என்பதற்குப் பதில்"சாதி" என்று மாற்றப்பட வேண்டும்.அதற்காகத்தான் பெரியார் சட்டத்தின் இந்தப் பகுதியை 1957லெ எரித்துப் போராடினார்.இதைச் சரியாக பண்டித நேருவிடம் எடுத்துச் சொல்லாமல் பெரியாரைத் தண்டிக்க்ப் புதிய சட்டமே இயற்றியது பார்ப்பனீயம்.
அனைவர்க்கும் கணிணி மூலமாக பிற்ப்பெண்கள் அடையாளமாகக் கொடுக்கப்பட்டு இட ஒதுக்கீடுகள் சாதிஅடையாள்ங்கள் இல்லாமல் அறியப்படவேண்டும்.இந்த எண் வரி ஏமாற்று கள்ளக்கணக்குகளை ஒழித்து விடும்.
அடுத்த தலைமுறையிலிருந்துக் கட்டாயமாகவும் இந்த்த்தலைமுறைக்கு விரும்பியவர்களுக்கும் சாதிப் பெயர் நீக்கம் செய்யப்பட வேண்டும்.
"சதுர் வர்ணம் மாயா சிருச்ஷ்டம்"போன்ற பிற்போக்கு,ஒருகுலத்துக்கு ஒரு நீதி மனு தர்மம் இந்து மதத்தினராலேயே தூக்கி எரியப்பட வேண்டும்.
இதெல்லாம் நடக்குமா என்றால் நடககத்தான் வேண்டும்.வெளிநாடுகளில் போயும் இன்னும் கோயிலிலும் சாதியிலும் 'தன் மந்திரம் பிராமணாதியம்"என்று புரியாத மந்திரத்தினால் கட்டுண்டு கிடக்கும் மூளையில் மாட்டப்பட்டுள்ள
விலங்குகள் வரும் தலைமுறையி னர்களால் உடைக்கப் படத்தான் போகிறது.பெண்ணுரிமைக்கு இன்று அனைவரும் போராடுவது போல் சாதி ஒழிப்பிற்கு அனைவரும் போராடுவது அடுத்தக்கட்டக் கட்டாயமாகவும் விரும்பத்தக்கதாகவும் வரத்தான் போகிறது.

நம்பி.பா. said...

Humanly,

Appreciate that you took time to read the entire article and posted comments on it!

inequality by birth by physically and/or mentally is totally different from difference-by-birth by a preaching religion! That is my point!

//two tigers born to the same mother// I totally disagree your example, I hope you will still treat both of them as tigers and not something else, similarly, I am not asking you to treat the elder tiger as the younger one and younger tiger as the elder; those things are irreversible, that is not what I am questioning.

w.r.t other religions, I believe you can change your division/sect/cult whenever you want, but that is not the case for Hinduism. The major difference between other religions and
Hinduism is, this CASTE or division/sub-division is decided by birth and you cannot change that, this is what being in practice! I do not want to compare or draw parallels with other religions, I felt that Caste-ism is one of the major thing that needs to addressed, so is my posting.
It is not right to say that the other religions have trouble so do Hinduism, I dont agree to that.

Atleast recent days there are lot of talks about CASTE by birth; a while ago, no one can even talk about it, this sea of change is happening only because those who started questioning about it! I cannot forget mentioning about PERIYAR; persons like him has provided the opportunity for everyone to talk about this! It wouldn't be possible for most of the people of this generation to live a better life, they would have been still suppressed by the inequality.
Periyar was hughly critic about the
inequality and ill-treatment and never supported violence.

I agree that progression should be continuous process, changing this plight of in-equality may take more than ten year, I was just ambitious to mention 10 years.

"change with-in" is what I am raising at this point, and definetely the responsibility lies on the religious leaders, since they represent/hold the religion it should be their first priority to talk about and eradicate the Caste in-equality.

I do not say that other religions are good/better than Hinduism;
what I believe is, all the religions were just meant to help/regulate the people on right path (as you mentioned), When things are not right, questions like mine needs to be raised unquestionably!

talks about religion or anything related to religion is not taken by anybody lightly, but if the state of the religion neglects the mass, that shouldn't be taken lightly too!

இவன் said...

நம்பி இது ஒரு நல்ல பதிவு!

உலகில் எந்த ஒரு மதத்துக்கும் இல்லாத ஒரு சிறப்பு இந்து மதத்திற்கு உண்டு, அது என்னவென்றால் இந்து மதத்திற்கு தோற்றம் கிடையாது. மற்றும் ஒரு சிறப்பு என்னவென்றால் இது ஒரு தனி மதம் கிடையாது, பல சிறு சிறு மதங்களின் கலவையே இந்து மதம்.

இப்படிப்பட்ட பெருமைவாய்ந்த மதம் ஒரு சிலரின் சுயலாபத்திற்காக திரிக்கப்பட்டு, அதனுள் நிற பேதங்களை நுழைத்தது ஒரு கொடிய சம்பவம். இந்து மதத்தில் மட்டும் தான் hierarchy முறையில் சாதி பிரிவினை. (வேறு ஏதாவது மதத்தில் இருந்தால் தெரியப்படுத்தவும்!). இந்த hierarchy முறை, மாற்று மதங்கள் இந்தியாவில் நுழையும் வரை எந்த ஒரு இடர்பாடுமின்றி இயங்கி கொண்டு இருந்தது. மாற்று மதம் வந்ததும் பாமரன் சிந்திக்க துவங்கினான் அவனது சிந்தனை கேள்வியாக வெடித்தது. இவர்களது கேள்விக்கு விடை கொடுத்ததில் பாரதி, ராஜராம் மோகன், பெரியார் போன்றாரின் பங்கு மிக அதிகம்.

இந்த சாதி பிரிவுதான் இந்தியாவின் முன்னேற்றத்திக்கு பெரிதும் தடையாக இருப்பது. இந்து hierarchy சாதி முறையில் ஒருவனுக்கு மேல் உள்ளவன் கீழ் உள்ளவனை அமுக்குவதிலே திருப்தி அடைகிறான். இதற்காக செலவிடப்படும் சக்தியை, முன்னேற்ற வழியில் செலுத்தினால் இந்தியா இன்னும் விரைவில் முன்னேற்றம் அடையும்.

உலகில் உள்ள அனைத்து மனிதர்களுமே ஒரே jean-ல் இருந்துதான் வந்தான் என்று அறிவியல் ஆய்வுகள் கூறிய பின்னரும் வர்ணசாஸ்திரம் பேசிக்கொண்டிருந்தால் உருப்பட்ட மாதிரிதான். (இது வர்ணசாஸ்திரம் பேசுபவருக்கு)

மனிதரை மனிதனாய் பாரும். (இது மனிதராய் பிறந்த அனைவருக்கும்)

நம்பி.பா. said...

நன்றி "இவன்" அவர்களே!
//மனிதரை மனிதனாய் பாரும்// சரியாய் சொன்னீர்கள், இதுதான் மனித குலத்தின் முதல் முக்கிய தேவை!

சாதி மட்டுமே ஒரே குறையா என்றால், அது முக்கிய பெருங்குறை என்பேன், முதலில் போக்க வேண்டியது அதுவே, மேலும் பற்பல மூட நம்பிக்கைகள் இந்த வரிசையில் இருக்கின்றன. அவற்றினையும் நாம் விடக்கூடாது.

அதுபோல, மற்ற மதங்களில் குறையில்லையா என்று கேட்டால்,
நிச்சயம் இருக்கின்றது, அதுபற்றி வேறு தளத்தில் களத்தில் விவாதித்துத்தான் ஆகவேண்டும்.

ஒரே மரபணுவிற்கு உலகை கூட்டிச் செல்லும், டார்வினின் பாதையே மூடுவதற்கு,"Scientology", "Creationinsm" & "Intelligent Design" என்ற போலிப் பெயர்களில் கிறித்துவ பழமைவாதிகள் பெரிதாய் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள், அதுவும்கூட முழுதாய் எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றுதான்.
இயேசு இன்று இருந்தால் அவரும் அவர்களை எதிர்ப்பாரென்றே எண்ணுகிறேன்.

நபிகள் சொன்ன நல்லவற்றையெல்லாம் விட்டுவிட்டு, எண்ணெய் வர்த்தகர்களின் பொம்மலாட்டத்தில் பொய்யான புனிதப்போரில் சேர்வதுவும் தவறுதான்!

இவற்றையெல்லாம் நாம் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தால்தான், ஒரு நாள் பதில் கிடைக்கும், அல்லும்பகலும் தெருக்கல்லாய் இருப்பதற்கு நாம் கற்கள் அல்லவே!

Anonymous said...

The question of caste is not in vedas or any other script. It is in the minds of people only. The very same people who want to bring the WEST to Madras for the wrong reasons but refuse to take into account the real goodness in the WEST.

Now people have gone to the extent of making Kamaraj as a Nadar community leader. I don't know when they are going to make LORD KRISHNA as the leader of YADAVA COMMUNITY. God forgive us all.

Prasanth said...

well,
According to me these religious scriptures is just a whole bunch of lies coz if u are old enough to think then u are old enough to know what's right and what's wrong.These scriptures are used mainly used "by" people who like to make a living out of it "for" the benifit of the stupid
so called ""samiyar"" and it is made "of" philosophy which can be found if dig deep inside our soul.Moreover"jaathigal illayadi paapa
endru padika sendra sirumyidam
pallikootam kaetadu jaathi sadrithal"--prasanth
Like to see more blogs like this
good luck

நம்பி.பா. said...

Thanks Anonymouns & Prasanth

For your visit and your comments.

BALA said...

Dear Nambi

Good Topic to discuss. Though the intention is good but contents are far from truth.

First of all Hinduism is not a religion but a way of Life!. In Vedas or Varnasramam, there is no divisions based on Birth. What Varnasramam says is it divides the society in to Four broad categories. It gives do's & don'ts for each.

First comes Brahmins, the dos & donts are very very strict and I can very confidently say there is not even a single brahmin living or can live today as per the conditions laid out.

Next comes Shatriyas means Kings or rulers. They have got certain concessions and severe restrictions as well because they need to be ruthless at times.

Next comes Vaishias means Traders or Business Community and it very clearly says how much profit one should have while doing business. Actually it lays down rules & regulations for doing business.

In today's life the politicians who assume Power should actually follow the rules & regulations of Shatriya dharma. The business community should follow Vaisiya dharma.

Then fourth comes people who don't belong to any of the above three categories and they are called Shutras means making their living by serving the above three categories. Remember all the four are refered as Dharmas.

One may ask why should there be a hiearchy like this. let me explain this with an example. In any organisation, there is a Chairman or a CEO. Then there are senior management, executives and then the substaff doing miscellaneous work. Everybody's contribution is vital for the smooth functioning of the organisation. Yet the power, respect and influence of a CEO or a Chairman cannot be the same that of a substaff because of the responsibility of the function. But as human beings there is absolutely no difference between a Chairman and a substaff. But in practice even today, take any organisation, is the substaff being treated on par with the CEO of an organisation?. No way!.

Now imagine the society as an organisation and one can really understand the intentions of Varnasramam. It recognises the importance of all the four categories for a smooth functioning of any Society.

Its an universal principles not pertains only to a particular area / country / continent. Its only a Professional Ethics as it is known today. It never advocates varnams based on birth. Rather one embraces the varnam by virtue of his way of life or in other words, based on his work.

The biggest problem today is people form opinion about Varnasramam & Manu Dharma Shastra with out actually reading it by themselves but mostly by hearsay or through the opinion of people who had half baked information or ulterior motives and propagated as if they knew everything.

Manu Dharma Shastra is nothing but THANDA NEETHI or at the most equivalent to today's criminal penal code. To comment about Manu Dharma, we need to consider the period in which it was written and why it was written.

Let me ask how many people actually gone through these subjects before they form an opinion on this. I would like to make one point here, the different bad definitions for the word Shutra given by our Dravidar Khalaga tholargal is born out of the imagination of people like Periyar and his followers for their petty survival. They did this not because of Ignorance but they intentionally took a very big ride on our ignorant public (Started with our previous generation).

It is only a System and the system is not at fault. All systems & Procedures should be properly understood and practised for the desired results. The fault lies in the people who misunderstood & practiced. As Swami Vivekananda says "lets accept there is some damage in our building. We should only try to repair the damage and should never try to demolish the building completely because what we are having is a TREASURE"

In any part of the globe we can see people who hold money and muscle power always try to dominate their fellow human beings by discriminating in one or other means.

Show me which country or which religion does not fight with each other within their own country. Be it in Europe, be it in America, African countries and middle east. Why even in Pakistan & Bangladesh mosques are being bombed even when people are praying not by Hindus but by Muslims and they call themselves Shias & Sunnys, Mujahideen etc., engaged in HOLY JIHAD!. Also there are innumerable subsect with in Muslims & Christianity fighting with each other.

Then why are we creating a kind of Hype only in India, that too only in Hinduism all these subsect exists. Creating a hype will never yield the desired results.

All the caste / religion conflict in our country are the handiwork of our politician with the help of anti social elements. To a greater extent todays politician themselves are anti social because that has become the primary qualification for entering the arena of politics in our country today.

Today, the Caste system is there only because of our political parties particularly by parties like Congress (INDIRA CONGRESS), Communists and all the small local state level parties and the shameless MEDIA.

Why i am making this point is atleast as far as I know no one is denied any position or opportunity in our country simply because He or She is a Muslim or Christian or in our SECULAR! politician's words MINORITY community. But the opposite is true that is if you are a Hindu, be prepared to make all the sacrifices.

The MEDIA will say the president is from MINORITY community completely ignoring his vast knowledge & belief on VEDAS. The present Chief Justice of Supreme Court of India is a DALIT. I came to know only after he assumed office of the Chief Justice of India. THANKS TO OUR MEDIA!

Our todays politician outshown the British in the art of "DIVIDE & RULE". Mahakavi says "Sontha Sakotharargal Thunbathil Saathal Kandum, Sinthai Irangaradi, Kiliye, Semmai Marantharadi!"

There is a old saying "Arasan Evvazhi, Avvazhi Kudivazhi". Let us accept both GOOD & EVIL co exist in this world. The society will blindly follow who ever is ruling irrespective of who is dominating. It is really sad in most parts of the world only EVIL is ruling. Ours is also no exeption!. Until and unless we make our politicians mend their ways or GOOD takes over, nothing worthwhile can happen. When & How this will happen is the BILLION DOLLAR QUESTION!

Finally I would like to quote the following words of Mr R Subramaniyam, Founder of Sterling Holiday Resorts, Chennai, " We have the Infinite Capacity for Perverting the Noblest of Thoughts, Distorting the Sanest of Perspectives and thereby Destroying Ourselves".

BALA @ BALAMURUGAN
CHENNAI

நம்பி.பா. said...

அன்புள்ள பாலா,
உங்கள் வருகைக்கும், கருத்துகளையும் மாறுபாடுகளையும் அறியப்படுத்தியமைக்கு நன்றி.
1) வேதத்தில் வேற்றுமை இல்லை, காலத்தின் கோலத்தில் வந்தது என்பதை வீதியெங்கும், கோவில்களெங்கும் எழுதி வைப்பதில் தவறென்ன?
2) குறை இருக்கிறது, பிழை இருக்கிறதென்று வெளிப்படையாய் அனைவரும் பேச ஆரம்பித்திருப்பதே கடந்த நூற்றாண்டிலிருந்துதானே? குறை என்ன பிழை என்னவென்று பேசினால்தானே அதை போக்க வழிகாண முடியும்?
3) காலம் பார்த்துக்கொள்ளும், தானாய் சரியாகிவிடும் என்பதெல்லாம் வேண்டாம், அதற்கு நம்மாலியன்ற செயலை, செய்ய வேண்டியவர்கள் செய்ய வேண்டுமென்பதே எனது கருத்து, அரசியல்வாதிகளை விட்டுவிடுங்கள், இதில் மதத் தலைவர்களின் பொறுப்பு என்ன என்பதே இங்கு முக்கியம்.
4) நான்கு நிலை தர்மங்களும், நால்வகை மனிதர்களும் அன்றைக்கு வரையறுக்கப்பட்ட வகையில் இன்றைக்கு இல்லை என்பதை ஒப்புக் கொள்ளுகிறீர்கள், அந்த கருத்தின்படியே, பிறப்பால் பாகுபாடு தவறென்பதை எல்லாவிடங்களிலும் நாம் வலியுறுத்த வேண்டுவது நம் கடமையல்லவா?
5) கார்ப்பரேட் படிநிலைகளுக்கும், சமுதாயத்தில் நால்வகை வர்ண நிலைகளையும் நேரிடையாக ஒப்பிட இயலாது, முதலும்(principle) முயற்சியும்(hardwork and efforts)
கார்ப்பரேட் படிநிலையில் ஒருவரை மேலும் கீழும் மாற்றும் வாய்ப்பு இருக்கிறது, இன்றுவரை இதில் அப்படி இல்லையே?
நம்போல் ஒருவரை பிறப்பின் காரணமாய் குறைப்பதுவும், பழிப்பதுவும் அடித்துக் கொள்வதுமான பிரச்சினைகளை மத அறிஞர்கள் பேசத்தயங்குவதேன்?
5) Repair is required, who will do it? not someone from outside will be interested todo that, I believe it's your responsibility!(means, whoever is following/preaching Hinduism)
6)you are contradicting yourself by saying "shameless media" at one para and "Thanks to MEDIA" in the next one. Not sure what you mean to say about 'Abdul Kalam', I think the complaint on him is he is siding more with the 'Gita', but looks like you are mentioning the opposite.
7)சொந்த சகோதரர்கள் நிலை கண்டு சிந்தை மாறாது, பொய்யாய், இன்றைய காலத்துக்குப் பொருந்தாத வர்ணத்தை இன்னும் எத்தனை நாட்கள்தான் தூக்கிப்பிடிக்க முடியும்?
8) அரசன் எவ்வழி- தேர்தலுக்கு தேர்தல் ஓட்டுப்போட்டு நாம் தேர்ந்தெடுக்கும் அரசனை மக்கள் வழி வரவழைக்க வேண்டியது, மக்களின் கடமை, படித்தவர்களின் கடமை! இதற்கான வழியை தேடுவதுதான் சரியாயிருக்கும்.
9) We also have the capacity to change the happenings, only if we all start thinking! சிறுமை கண்டு பொங்குவாயென பாரதி சொன்னதை
தினம் எண்ணிப்பார்ப்போம்!

BALA said...

Dear Nambi

My reply to your observations

1 I am saying today there is no serious caste / religion hatred among common public in our country. All the problems are instigated only by the politicians and their goondas. All i am trying to say is its not a social issue rather its a political issue. Today caste is there only because of the concessions/reservations. The politicians will ensure that this does not change for the better.

2 I compared corporate set up as an example and its definitely holds good as far as the concept is concerned.

3 There is no contradiction in my view on Media. When i said Thanks to Media its only a sarcastic remark. The main complaint on the Media is that instead of highlighting the professional acumen / achievement, they are highlighting the caste / religion of the people. When they say Abdul Kalam represents the minority community, its actually a shame on him. There is no need to refer him like this. Also they should not brand the present Chief Justice as the first Dalit Chief Justice. He has not achieved this because he is a dalit. I am not against telling the public how much hard efforts he has put in to reach this level. I am only against creating a hype by branding them as DALIT & MINORITY. Actually its an insult to them.

Dr Abdul Kalam is branded as a MUSLIM President by the media. Where as he has a vast knowledge on our Hindu Vedas and Bhagavat Gita and has really understood the contents and always tries put in to practice what he has learned. I feel its a compliment for him if people perceive he is siding with Bhagvat Gita and it can never be a complaint.

4 Let us be clear on one thing, varnasramam has nothing to with today's caste issues.

5 Politicians can be changed through elections but vast majority of voting public does not know the value of their votes. We need to find a way to overcome this. The people who has the knowlege are today only a minority. Democracy is only a number game, only majority wins. Here we have a real issue on hand and i do not have any readymade solution for this.

Bala @ Balamurugan
Chennai

நம்பி.பா. said...

அன்புள்ள பாலா,
உங்கள் கருத்துக்கள் நடைமுறை உண்மைகளை அப்பட்டமாக மறுப்பதாகத்தானுள்ளது!
1) மக்களிடையே சாதிப் பாகுபாடு பெரிதாக இல்லையென்பது கேட்க நன்றாக இருக்கிறது, நடைமுறை உண்மை அதுவல்லவே?
2) கார்ப்பரேட் ஒப்பீட்டை என்னால் ஏற்க இயலவில்லை, பணம் பண்ணும் கார்ப்பரேட்டின் படிநிலைகளும், வாழ்வு காட்ட வேண்டிய மதத்தின் பெயரிலான சாதிப் பாகுபாட்டுப் படிநிலைகளும் ஒன்றாகா!
3) இன மதப் பாகுபாடின்றி வளர்க்கப்படுவதுதான், நாளைய குடியரசுத் தலைவரையோ, உச்சநீதிமன்ற நீதிபதியையோ நாம் தலித் என்றோ முஸ்லிம் என்றோ அடையாளம் காட்டாமல் இருக்க உதவும் ஒரே வழியாகும், இதற்கு நாம் தயாரா? ஊடகத்தையும் (Media)
அரசியல்வாதிகளையும் மட்டுமே இதில் குறைசொல்வது தவறு.
4) வர்ணாசிரமத்திலல்லாமல் வேறெதிலிருந்து இந்த பாகுபாடுகள் பிறப்பின் மூலமாய் நிலைநாட்டப் பட்டன? இந்த பாகுபாட்டை களைய இந்து மதத் தலைவர்களின் செயல்பாடு என்ன? மறுபடியும் எனது துவக்க கேள்விக்கே வந்திருப்பதாய் எனக்குப் படுகிறது.
5) இன்றின் பிரச்சினைகளை நம்மால் ஒரே நாளில் ஒரே மனிதரால் தீர்க்க வேண்டுமென கேட்கவில்லை, அதற்கான ஆக்கமான சிந்தனையை, கேள்விகளை எழுப்புவதே, குறைகளைய வழிகாட்டுமென்பதே எனது எண்ணம்!