Friday, January 5, 2007

மனமும் மழைக்கால மழலைகளும்!

மனமும் மழைக்கால மழலைகளும்!

தூவானப் பூக்கள்
ஈரம் தரும் நேரம்
அந்தியின் ஆர்ப்பாட்டத்துக்குள்
அடைக்கலமாகும் சூரியன்;

பொய்யறியாத இரு சிறு பிஞ்சுகள்
பூமழையில் நனைதல் கண்டேன்

விளையாட்டாய் வாழ்க்கை
உலகம் சுற்றிலும் இல்லாததுபோல்
மழை தீர மகிழ்ச்சி கூட
துள்ளியாடும் பிள்ளைகள்;

போன துளி உனது
அடுத்த துளி எனதென
ஆழித்துளிகளைக் கைகளுக்குள்
அடக்குதல் கண்டேன்;

காற்றும் குளிர் கூட்டிட
வானமும் சூரியனும்
காதல் வண்ணக் கோலமிட
மாலையென் மனதை நிறைக்குது!

பிள்ளைகளுக்காய் இருப்பதா
உலகுக்காய் போவாதாவென
வானத்துடன் சிவக்கப் பேசிவிட்டு
கடல் மறைந்தது சூரியன்;

அன்னையின் அழைப்பும்
பிள்ளைகளை ஈர்த்தது;
நிலவு வரப்பார்த்தது
நானும் அங்கே கலைந்தேன்;

அன்புடன்,
நம்பி.பா.

11 comments:

Humanly said...

Nambi PAA,

Reminds me of Munshi Premchand's "baar Baar Aathi hi mujuko Madhur Yaadh Baccham Teri, Gaya Le Gaya Thu Jeevan ke Sabse Masth Kushi Meri"
Aslo reminds me of Jagjith Singh "Kaagaz Ki Kashti Ye Baarish kaa Mousam"...

Nicely written.
Keep the good work.
Nambi.

go_getter said...

மழலையோடு மழலையாய் மழையில் நினைந்த உணர்வை கொடுக்கின்றது. உங்கள் கவிதை மிக அருமை!!

நம்பி.பா. said...

நன்றி Humanly,
எனக்கு ஜக்ஜித் சிங்கின் "காகஷ் கி கஷ்டி" தெரியும்,
முன்ஷி ப்ரேம்சந்தின் கஜலையும் விரைவில் கேட்க முயற்சிக்கிறேன்.

நன்றி வஞ்சி,
அந்த உணர்வில்தான் நானும் எழுதியிருக்கிறேன்.

Sekar said...

Nayamana katchiyai
Nalinamana kavithaiyal Alli thelithu Engalai Nannayavaitha
Nambiku Nandri!!

சேதுக்கரசி said...

//பிள்ளைகளுக்காய் இருப்பதா
உலகுக்காய் போவாதாவென
வானத்துடன் சிவக்கப் பேசிவிட்டு
கடல் மறைந்தது சூரியன்//

மிகவும் அருமையான கற்பனை நம்பி.

நம்பி.பா. said...

சேகர்,
சியாட்டில் போகாமலேயே மழையை பற்றி எழுதிட்டேன்.
உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

சேதுக்கரசி,
வாங்க, உங்க வாழ்த்துக்கு நன்றி.
"பொல்லாத மௌனம்" என்று பெயர் வைத்துவிட்டாலும்
நீங்க மௌனமாக இருப்பதுபோல் தெரியவில்லையே!!

அன்புடன்,
நம்பி.பா.

சேதுக்கரசி said...

//"பொல்லாத மௌனம்" என்று பெயர் வைத்துவிட்டாலும்
நீங்க மௌனமாக இருப்பதுபோல் தெரியவில்லையே!!//

அது அப்படித்தான் :-)

கோபிநாத் said...

வணக்கம் நம்பி..

அருமையான கவிதை...

உங்கள் கவிதை துளியில் நானும் நனைந்து கலைகிறேன்.

நம்பி.பா. said...

கோபிநாத்
உங்கள் வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி.
அன்புடன்,
நம்பி.பா.

Priya said...

Excellent kavithai. Went back to childhood (played on rain).

நம்பி.பா. said...

Thanks Priya for your visit and feedback.
-Nambi.