வேகமும் விவேகமும்
இன்றைய வேகமான வாழ்க்கை முறை, நமது 15-20 ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கை முறையை விடவும், ஒரு தலைமுறைக்கு முந்தைய வாழ்க்கை முறையை விடவும் பெரிதும் வேறுபட்டுள்ளதென்பதில் சந்தேகமில்லை. உடலுழைப்புக்கான தேவை இயந்திர மயமாக்கத்தால் குறைந்து விட்டிருக்கிறது. பெரும்பாலான வீடுகளில் பெண்களுக்கான வேலைகளில் பலவற்றை மிக்ஸிகளும் கிரைண்டர்களும் குறைத்திருக்கின்றன. ஆண்கள் மற்றும் குடும்பத்தினரின் போக்குவரத்துப் பழக்கங்கள் சைக்கிள் மற்றும் பஸ்களிலிருந்து பைக்குகள் மற்றும் கார்களுக்கு மாறிவிட்டது. உட்கார்ந்த இடத்திலேயே வேலை பெரிதும் இருப்பதால், நடை மற்றும் உடலுழைப்பு குறைந்துவிட்டது. மாலைகளில் வீதிகளில் விளையாடியிருந்த பிள்ளைகள் குடும்பத்துடன் தொலைக்காட்சிப் பெட்டிகளில் மயங்கிக் கிடக்கின்றனர். எல்லா விதத்திலும் முன்பிருந்த உடலுழைப்பு மிகப் பெரும்பாலானவர்களுக்கு குறைந்துவிட்டது.
நமது உணவுப் பழக்கம் இதற்கு நேரெதிரே மாறியுள்ளது மட்டுமல்லாமல் என்ன உண்ணுகிறோம் எதற்காக உண்ணுகிறோம் என்பது குறித்த விழிப்புணர்வும் அறிவும் மிகவும் குறைவாகவே உள்ளது.
பயறுவகைகள் மற்றும் காய்கறிகளின் பயன்பாடு குறைந்து அரிசியின் அளவு கூடியிருக்கிறது. எண்ணெய் மற்றும் இனிப்பு வகைகளின் நுகர்வு மிக மிக அதிகரித்துள்ளது. முன்னெப்போதுமில்லாதவாறு, சிறு பிள்ளைகளிடையே உள்ள உடற் பருமன் தொடர்பான நோய்களும், சர்க்கரை நோயின் தாக்கமும் மற்றும், வளர்ந்தவர்களிடையே பருத்த உடல்களும், உடற்பருமன், உடற்கொழுப்பு நோய்களும் அவற்றுக்கான மருத்துவச் சிகிச்சைக்கான தேவையின் அதிகரிப்பும் இதை நிரூபிக்கும். வேகமான நமது வாழ்க்கையில் விவேகமான உணவுப் பழக்கத்தை கைக்கொள்ள மறந்து விட்டிருக்கிறோம், நிச்சயமாய் நமது உணவுப் பழக்கத்தை முழுதாய் மாற்ற வேண்டிய நாள் வெகுதூரத்தில் இல்லை.
நமது உணவுப் பழக்கம் இதற்கு நேரெதிரே மாறியுள்ளது மட்டுமல்லாமல் என்ன உண்ணுகிறோம் எதற்காக உண்ணுகிறோம் என்பது குறித்த விழிப்புணர்வும் அறிவும் மிகவும் குறைவாகவே உள்ளது.
பயறுவகைகள் மற்றும் காய்கறிகளின் பயன்பாடு குறைந்து அரிசியின் அளவு கூடியிருக்கிறது. எண்ணெய் மற்றும் இனிப்பு வகைகளின் நுகர்வு மிக மிக அதிகரித்துள்ளது. முன்னெப்போதுமில்லாதவாறு, சிறு பிள்ளைகளிடையே உள்ள உடற் பருமன் தொடர்பான நோய்களும், சர்க்கரை நோயின் தாக்கமும் மற்றும், வளர்ந்தவர்களிடையே பருத்த உடல்களும், உடற்பருமன், உடற்கொழுப்பு நோய்களும் அவற்றுக்கான மருத்துவச் சிகிச்சைக்கான தேவையின் அதிகரிப்பும் இதை நிரூபிக்கும். வேகமான நமது வாழ்க்கையில் விவேகமான உணவுப் பழக்கத்தை கைக்கொள்ள மறந்து விட்டிருக்கிறோம், நிச்சயமாய் நமது உணவுப் பழக்கத்தை முழுதாய் மாற்ற வேண்டிய நாள் வெகுதூரத்தில் இல்லை.
- இனிக்கும் சர்க்கரையின் கசக்கும் உண்மை
உலக சுகாதார நிறுவனத்தின் (World Health Organization) அறிக்கையின்படி, உலக நாடுகளிலேயே அதிக அளவில் சர்க்கரை நோயாளிகள் உள்ள நாடு இந்தியா!
மூன்று கோடிக்கும் மேலான இந்தியர்களைப் பாதித்திருக்கும் இந்த சர்க்கரை நோய், 2030 வாக்கில் ஏழு கோடிக்கும் மேலான இந்தியர்களை பாதிக்கும் வாய்ப்பிருப்பதாக தெரியவருகிறது.
நம்மிலும் மக்கள் தொகை கூடியுள்ள சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது.
- வல்லரசா இல்லை பேரரசா (பெருத்த அரசா)?
வயது வந்தவர்களிடையே தொந்திப் பருமன் குறித்து 60 உலக நாடுகளுக்கிடையே நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், இந்திய ஆண்களில் 58 சதவிகிதத்தினருக்கு மேலும், பெண்களில் 75 சதவிகிதத்தினருக்கு மேலும் அதிகத் தொந்திப் பருமனுடையவர்களென அறியப்பட்டுள்ளது. இவர்களில் பத்தில் ஆறு பேருக்கு சர்க்கரை நோய் உட்பட பல நோய்கள் வருவதற்கான வாய்ப்பு மிகவும் அதிகமுள்ளது.
- பள்ளிப் பிள்ளைகளின் உணவுப் பழக்கங்களும் நோய்களும்
டெல்லி நீரிழிவு நோய் ஆராய்ச்சி மையத்தின் தற்போதைய அறிக்கையின்படி, 10 முதல் 14 வயதுள்ள பள்ளிப் பிள்ளைகளி டையே நடத்திய ஆய்வின்படி, சர்க்கரை நோயுள்ள 85% பிள்ளைகள் அதிக உடற் பருமனுடையவர்களெனவும் அவர்களினுடைய உணவுப்பழக்கங்கள் ஆரோக்கியமாக இல்லாததே முக்கியக் காரணமென கூறப்பட்டுள்ளது.
உடல் நலனுக்கு எது அளவுகோல்?
முதலாவதாக ஒருவரின் இடுப்பளவு அவர்களின் உடல்நலனைச் சுட்டிக்காட்டும் ஒரு அளவுகோல், இது மெட்டபோ (metabo) என்றும் அழைக்கப்படுகிறது.
உலக நீரிழிவு நோய்க் குழுமத்தின் முடிவின்படி
ஆசிய & ஜப்பானியர்களில் - வயது வந்த ஆண்களில் இடுப்பளவு 33.5 அங்குலத்திற்கு கீழும் பெண்களில் 35.4 அங்குலத்திற்கு கீழுமாக உள்ளவர்களுக்கு
உடற்பருமன் மற்றும் அது குறித்த நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைவு.
வெள்ளை இனத்தவர்களுக்கு - வயது வந்த ஆண்களில் இடுப்பளவு 37 அங்குலத்திற்கு கீழும் பெண்களில் 31.5 அங்குலத்திற்கு கீழுமாக உள்ளவர்களுக்கு
உடற்பருமன் மற்றும் அது குறித்த நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைவு.
கடந்த ஜூன் முதல், ஜப்பானிய அரசு இது குறித்த ஒரு சட்டமே இயற்றியுள்ளது, அளவுகோலின்படி இடுப்பளவு மிகுதியாக உள்ளவர்களுக்கு, உணவுக் கட்டுப்பாட்டு முறைகளினைக் குறித்த கல்வியும் தொடர் விழிப்புணர்வும் ஏற்படுத்துவதுடன், அடுத்த நான்காண்டுகளில், உடற்பருமனாக இருப்பவர்களில் பத்து சதவிகித்தினரினைக் குறைக்கும் குறிக்கோளோடு செயல்பட்டுவருகிறது. தற்போது நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதில் ஈடுபடத் துவங்கியுள்ள இந்திய அரசு, அடுத்த ஐந்து அல்லது பத்தாண்டுகளில் இத்துறையில் மேலும் தீவிரமாகச் செயல்பட்டாக வேண்டும்.
அடுத்ததாக, Body Mass Index (BMI) எனப்படும் உடற் பருமன் சுட்டி, உடல் எடையையும் உயரத்தையும் ஒப்பிடும் இந்தச் சுட்டி ஒருவரை, சராசரி எடையுள்ளவர், அதிக அல்லது குறைந்த எடையுள்ளவரென பாகுபடுத்துவதன் மூலம் உடல் எடை குறித்த விழிப்புணர்வை அளிப்பது.
உடற் பருமன் சுட்டி (BMI) அளவுகள்:-
- குறைந்த எடையுள்ளவர்கள் = 18.5க்கு கீழுள்ளவர்கள்
- சராசரி எடையுள்ளவர்கள் = 18.5 to 24.9
- அதிக எடையுள்ளவர்கள் = 25 to 29.9
- உடற் பருமன் அதிகமுள்ளவர்கள் = 30 அல்லது அதற்கு மேலுள்ளவர்கள்
மூன்றாவதாக, ஓவ்வொருவரும் தமது உடல் இயக்கத் தேவைக்கான உணவை உட்கொள்வது. உதாரணமாக, 31-இலிருந்து 50 வரை வயதுள்ள ஒரளவுக்கு உடல் உழைப்பு உள்ள ஆண்கள் ஒரு நாளைக்கு 2200-இலிருந்து 2400 கலோரி உணவு எடுத்துக் கொள்ளலாம். அதே வயதுப் பிரிவிலுள்ள பெண்கள் 1800 கலோரி உணவு எடுத்துக் கொள்ளலாம்.
வயது, உழைப்பு மற்றும் இயக்கத்திற்கேற்ற உணவுத் தேவை:-
| பாலினம் | வயது | இயக்கம் குறைவு | இயல்பான இயக்கம் | அதிக இயக்கம் உடையவர்கள் |
|---|---|---|---|---|
| குழந்தைகள் | 2-3 | 1,000 | 1,000-1,400 | 1,000-1,400 |
| பெண்கள் | 4-8 9-13 14-18 19-30 31-50 51+ | 1,200 1,600 1,800 2,000 1,800 1,600 | 1,400-1,600 1,600-2,000 2,000 2,000-2,200 2,000 1,800 | 1,400-1,800 1,800-2,200 2,400 2,400 2,200 2,000-2,200 |
| ஆண்கள் | 4-8 9-13 14-18 19-30 31-50 51+ | 1,400 1,800 2,200 2,400 2,200 2,000 | 1,400-1,600 1,800-2,200 2,400-2,800 2,600-2,800 2,400-2,600 2,200-2,400 | 1,600-2,000 2,000-2,600 2,800-3,200 3,000 2,800-3,000 2,400-2,800 |
உடற்பருமனுக்கான முக்கிய காரணங்கள்
உடற் பருமனுக்கான முக்கிய காரணங்களாக ஆராய்ச்சியாளர்களால் கூறப்படுவன:-
1) மரபியல் - பெற்றோரில் ஒருவரோ அல்லது இருவருமோ உடல் பருமனாக இருத்தல்
2) அதிகம் உண்ணுதல்
3) உடலுழைப்பு குறைவாக இருத்தல்
4) மன நோய் மற்றும் உடலில் உள்ள நோய்கள் - மனக்கவலை, மன அழுத்தம், மெடாபாலிசக் (உடற் செயல்பாட்டு) குறைவு, தைராய்டு குறைவாக இருத்தல் போன்றன
5) மருத்துவ சிகிச்சைகளின் விளைவு - உயர் இரத்த அழுத்த சிகிச்சை, மன அழுத்த சிகிச்சை மருந்துகள் போன்றன
நீங்கள் எங்கே நிற்கிறீர்கள்?
1) உங்களின் மெட்டபோ (metabo) அளவை அறிந்துகொண்டு சரியான அளவிலிருக்கிறதா எனப் பார்க்கலாம்.
2) உங்களின் உடற் பருமன் சுட்டி (BMI) சரியான அளவிலிருக்கிறதா எனப் பார்க்கலாம்.
3) மேலுள்ள இரண்டு அளவுகளுடன், முழு மருத்துவப் பரிசோதனை ( குறைந்தபட்சம் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை) செய்வதன் மூலம், உடற் கொழுப்பு, சர்க்கரை நோய் பாதிப்பு இல்லாமல் உங்களின் உடல் நலன் உள்ளதா என அறிந்துகொள்ளலாம்.
உடற் பருமன் மற்றும் உடற் கொழுப்பைக் குறைக்க விரும்புபவர்கள் என்னென்ன செய்யலாம்?
உடற்பருமன் மற்றும் உடற்கொழுப்பு குறைக்க விரும்புபவர்களுக்கு எனக்குத் தெரிந்த சில யோசனைகள்
1) உணவில் அரிசியின் அளவைக் குறைத்து காய்கறிகளையும், பயறு வகைகளையும் கூட்டுங்கள்.
2) மாமிச உணவு உண்பவர்கள், அளவைச் சிறிதளவேனும் குறைத்தும், அடிக்கடி உண்ணுவதைத் தவிர்க்கவும் முயலலாம்.
3) முட்டை உண்ணுபவர்கள், மஞ்சள் கருவைத் தவிர்ப்பது நல்லது.
4) எண்ணெய் மற்றும் இனிப்பு உணவு வகைகளை உண்ணுவதைக் குறைக்கலாம்.
5) பீட்ஸா மற்றும் பர்கர்கள் போன்ற அதிக கலோரியுடைய உணவுகளினை உண்ணுவதைக் குறைத்தல்.
5) பீட்ஸா மற்றும் பர்கர்கள் போன்ற அதிக கலோரியுடைய உணவுகளினை உண்ணுவதைக் குறைத்தல்.
6) தினமும் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்யவேண்டும். நடைபயிலுதல் முதற்கொண்டு உடற்பயிற்சிக் கூடம் செல்லுதல் வரை இயன்ற உடற்பயிற்சியைத் தவிர்க்காமல் செய்யவேண்டும்.
7) மது, சிகரெட் முடிந்தால் முற்றிலும் தவிர்க்கவும்.
8) அதிக தண்ணீர் அருந்துதல் மற்றும் செயற்கை குளிர்பானங்களைத் தவிர்த்தல்
8) அதிக தண்ணீர் அருந்துதல் மற்றும் செயற்கை குளிர்பானங்களைத் தவிர்த்தல்
மேலும் அறிய, செயலாற்ற விரும்புபவர்களுக்கு
1) நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவின் கலோரி அளவை அறிந்துகொண்டு உட்கொள்ளப்படும் உணவின் அளவை கட்டுப்படுத்தலாம்.
http://www.my-calorie-counter.com/ மற்றும் http://www.calorieking.com/ போன்ற இணையத்தளங்களினைப் பயன்படுத்தி மொத்தம் உட்கொள்ளப்படும் கலோரி அளவை அறிந்து கொள்வது மட்டுமல்லாமல், நாட்குறிப்பு போல் குறித்தும் வரலாம்.
2) அமேரிக்க உணவு மற்றும் மருந்துகள் முறைப்படுத்தும் FDA-வின் உணவுப் பிரமிட் பரிந்துரைப்படியாக உணவு உட்கொள்ளும் முறை, அரிசியை அதிகம் சார்ந்த நமது உணவுப் பழக்கத்தினை இதற்கேற்றாற்போல் மாற்றிக் கொள்வது பெரிதும் உதவும்.

3) அமேரிக்கா போன்ற நாடுகளில் வசித்தால், கிட்டத்தட்ட ஒவ்வொரு உணவுப் பொருளிலும் அந்த உணவிலுள்ள பகுதிப் பொருட்களின் கலோரி அளவு தெரியப்படுத்தப்பட்டிருக்கும்.
உணவுப் பிரமிட் மற்றும் மொத்த கலோரி அளவுக்குள்ளாக தினசரி உட்கொள்ளும் உணவை மாற்றியமைப்பதுவும் பெரிதும் உதவும். உடற்தேவைக்கு அதிகமாக உண்ணும் வாய்ப்பை முழுதாய்க் கட்டுப்படுத்த இது பயன்படும்.
பின்குறிப்பு:- நான் மருத்துவத் துறையில் பணியாற்றவில்லையெனினும், உடல் நலன், உடற்பருமன், உடற்பயிற்சி தொடர்பான தகவல்களைத் தேடிப் படிக்கும் பழக்கமுள்ளவன். இந்தப் பதிவு எந்த விதத்திலாவது உங்களுக்கு உதவ வேண்டுமென்பதே எனது ஆவல்.
நேரம் கிட்டும்போது இந்தத் தளங்களுக்கு செல்லுங்களேன்.
நேரம் கிட்டும்போது இந்தத் தளங்களுக்கு செல்லுங்களேன்.
http://www.my-calorie-counter.com/Content/Healthy-Habits.asp
http://www.my-calorie-counter.com/
http://www.nhlbisupport.com/bmi/
http://www.nytimes.com/2008/06/13/world/asia/13fat.html
http://weighttraining.about.com/od/fatlossweighttraining/a/fat_measure.htmhttp://diabetes.webmd.com/news/20040426/diabetes-rates-worldwide
http://ibnlive.in.com/news/indians-rank-high-on-obesity-index/27053-17.html
http://www.mypyramid.gov/
http://www.hinduonnet.com/thehindu/holnus/099200811170332.htm

15 comments:
உணவுப் பழக்கத்தை மாற்றினால் ரொம்ப நல்லது.
குழம்பு, கூட்டு, ரசம்,பொரியல்னு செஞ்சு அலுத்துப்போச்சு.
பேசாம வேகவச்ச காய்கறிகளைத் தின்னால் ஆகாதா?
இந்த உடற்பருமன் அப்படீன்னா என்னங்க?
:-))))))))
உணவு பழக்கங்களில் மாற்றம் தேவை தான் அதை சிந்திக்க முதலில் மூளையை பழக்கப்படுத்த வேண்டும். :-)
நன்றி துளசி கோபால்! :-)
நன்றி வடுவூர் குமார்.
காய்கறி உணவென்ற பெயரில், அதிக அரிசியை பற்றி நிற்கும் பழக்கத்தை மாற்ற முடிந்தாலே நன்றாக இருக்கும். நம்ம ஊரில் ரிலேட்டிவ் ஸ்கேலில்தானே பருமனைப் பார்க்கிறோம்.
பயனுள்ள கட்டுரை.
சாந்தி
மிக பிரயோசனமான தகவல் நன்றி
சாந்தி & பிரதீபன் - உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.
இது போன்ற பதிவுகள்
மிக அவசியம்.புரியவில்லை
என்று யாரும் ஒதுக்க முடியாது.
தொடர்ந்து எழுதவும்.
தேவா.
இது போன்ற பதிவுகள்
மிக அவசியம்.புரியவில்லை
என்று யாரும் ஒதுக்க முடியாது.
தொடர்ந்து எழுதவும்.
தேவா.
மிக முக்கியமானது வாரம் ஒருமுறை எடை பார்ப்பது.
நம்பி, நீங்கள் மரத்தடி யாஹூ குழுவில் அறிமுகமான அதே நம்பியா?
நன்றி தேவன் மாயம்;
நன்றி ramachandranusha(உஷா);
நான் மரத்தடி பக்கம் ஒதுங்கியதில்லை, அவர் வேறு நம்பியாக இருக்கலாம். வாரம் ஒருமுறையாவது எடை பார்ப்பதுவும் எடை குறைதலையோ கூடுதலையோ உடன் எடுத்துக்காட்டிவிடும்.
பயனுள்ள பதிவு
உருப்படியான ஒரு பதிவு.
வாழ்த்துக்கள்.
நன்றி ஸ்ரீதர் கண்ணன் & அறிவன் உங்கள் ஊக்க வார்த்தைகளுக்கு!
//மாலைகளில் வீதிகளில் விளையாடியிருந்த பிள்ளைகள் குடும்பத்துடன் தொலைக்காட்சிப் பெட்டிகளில் மயங்கிக் கிடக்கின்றனர் //
போகட்டும் பள்ளிக்கூடங்களிலாவது கண்டிப்பான முறையில் விளையாட்டு, உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்கி பிள்ளைகளின் உடல் நலனை வழிப்படுத்த முனைகிறார்களா என்றால் அதுவும் இல்லை.
//கடந்த ஜூன் முதல், ஜப்பானிய அரசு இது குறித்த ஒரு சட்டமே இயற்றியுள்ளது,...//
நம்மூர் போலீஸ்காரர்களுக்கே BMI வரைமுறைகள் இருக்கிறதா என்பது சந்தேகமே :))
எனது ப்ளாக்கை என்னால்
தமிழ்மணத்தில் இணைக்க
இயலவில்லை!
எளிய வழி இருந்தால்
உதவவும்!!!
Post a Comment