இதுவரை பொதுமக்கள் உலாவும் கடைவீதிகளையும், கட்டிடங்களையும் குண்டுவைத்துத் தாக்கியவர்கள் இந்த முறை வெளிநாட்டவர் அதிகம் புழங்கும் தாஜ், ஓபராய் போன்ற இடங்களில் துப்பாக்கி தாங்கிய தீவிரவாதத் தாக்குதலாக நடத்தப்பட்டிருக்கிறது. தேசிய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலான கவனத்தை முழுமையாகப் பெறும் எண்ணத்துடன் திட்டமிட்டு செய்யப்பட்டிருக்கும் இந்த தாக்குதலை நடத்தியதற்கான காரணம், 1992 டிசம்பர் ஆறாம் தேதியன்று அயோத்தியிலிருந்த பாபர் மசூதியை இடித்த நிகழ்ச்சியின் தொடர் விளைவான மத வெறுப்பே எனத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களும், பாகிஸ்தானியர்கள் மற்றும் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற குழுவினர்கள் துப்பாக்கியைத் தாங்கி இந்த தாக்குதலை நடத்தியிருக்கின்றனரென்று கிடைக்கப்பெறும் தகவல்களிலிருந்து தெரியவருகிறது. காரணம் எதுவாயினும் இத்தனை பேரைக் கொன்ற, பலரின் உயிருக்கும் நலனுக்கும் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வன்செயல் முழுமையாகக் கண்டிக்கத்தக்கது!
கொன்றவர்கள் முஸ்லிம் தீவிரவாதிகளாயிருந்தாலும், இறந்தவர்கள் வெறுமனே இந்துக்கள் மட்டுமல்ல, மற்றெல்லா மதத்தினரும்தான். இந்தச் செயலால் நாடு முழுவதும் அதிர்ச்சியில் நின்றுகொண்டிருக்கின்றது. இன்னமும் தீவிரவாதிகளால் சிறைப் பிடிக்கப்பட்ட பிணைக் கைதிகளை விடுவிப்பதற்காக தேசிய பாதுகாப்புக் குழு படைவீரர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
திரும்பிய பக்கமெல்லாம் இந்தியத் தொலைக்காட்சிகளில் இது ஏதோவொரு திரைப்படச் சண்டைக்காட்சியைப் போல, மக்கள் பயத்தில் ஓடி ஒளிவதையும், வீதிகளில் குப்பையாய் இரத்தத்தில் வீழ்ந்து கிடப்பதையும், இறந்த உடல்களை தரையிலிழுத்துச் சென்று அப்புறப்படுத்துவதையும் திரும்பத் திரும்ப ஒளிபரப்புவது, தகவல் தரும் தேவையையும் நோக்கத்தையும் தாண்டி மக்களிடையே பயத்தையும் கோபத்தையும் உண்டாக்கும் விதத்தில் இருப்பது வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது. இவர்களின் வியாபாரத்திற்கு இதையும் ஒரு நிகழ்ச்சியாக மாற்றுகிறார்களென்பது மிகவும் ஆபத்துக்குரியது. மதத்தை விற்றுப் பிழைக்கும் அரசியல் கட்சிகள் ஏற்கனவே இதில் என்ன ஆதாயமென்று தேட ஆரம்பித்துவிட்டன.
துப்பாக்கி தாங்கியவர்கள் டெக்கான் முஜாகுதீன் (புதிய குழுவினர்) எனும் முஸ்லிம் தீவிரவாதிக் குழுவென்று அடையாளம் காட்டப்பட்டுள்ளது. 1992இன் பாபர் மசூதி உடைப்பின் தொடர் நிகழ்வாக வளரத் துவங்கிய இந்து முஸ்லிம் மத வெறிப்பகையின் உச்சமாய் இன்றைய தாக்குதல் உள்ளது. இந்த பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகாமல் மத வெறி நோக்குடன் அதிகார வர்க்கமும், அரசியல்வாதிகளும், ஊடகங்களும் அணுகினால் இந்த முற்றுப்புள்ளி வரவே வராது. மேலும், கொல்லும் இந்தச் சிறு வெறிக்கும்பலினால், முஸ்லிம் விரோத மனப்பாங்கு வருங்காலங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஊடகங்களில் இன்னமும் அதிகமாய்த் தூண்டப்படுமென்பதே இதன் முக்கிய வருந்தத்தக்க விளைவாகும். பின்னாளில் நடைபெறவிருக்கும் இன்னொரு துயர நிகழ்விற்கு இது அடிகோலியிருக்கிறது.
தீவிரவாதத்தையும் தீவிரவாதிகளையும் மக்களிடமிருந்து தனியே பிரித்துப் பார்ப்பதுதான் வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க உதவும் ஒரே வழி. ஆயுதம் கொண்டவர்களை அழிக்க முடிந்தாலும், பின்னாலிருந்து இவர்களை ஆதரிக்கும், தூண்டும் கும்பல்களை எந்த அரசாங்கத்தாலும் அழிக்க இயலாது. இந்து மற்றும் முஸ்லிம் மதப் பெரியவர்களை ஒன்று கூட்டி பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதுடன், சமூகத்தில் அடிமட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள இரு தரப்பினருக்கும் அரசின் மூலமாக அவர்களின் குறைகளை நீக்கும் மக்கள் நலத் திட்டங்கள் துவக்கி அவற்றிற்கு செலவு செய்யவும் மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும். தீவிரவாதத் தடுப்புப் பிரிவினருக்கு செலவு செய்வதுபோல் பலமடங்கு இந்த பொது மக்கள் பங்கெடுப்பு நிகழ்வுகளுக்கு செலவு செய்தாக வேண்டும்.
அரசியலில் மதத்தைக் கலக்கும் மத வெறியாளர்களிடமிருந்து இந்த திட்டத்தை காப்பாற்றவும் அதிகாரத்திலுள்ளவர்கள் முன்வருவதுவும் முக்கியத் தேவையாகும். இது போன்ற ஒரு செயல் திட்டத்தினை செயல்படுத்திட ஆட்சியிலுள்ளவர்கள் முன்வருவார்களா?
5 comments:
Excellent Article..
I appriciate and support your views..Normally the middle class people will express condolence & they blame politician sometime they blame entire community for the blast.
our govt. should discuss with social activist how to erdicate/elminate section of people support such terrar groups.
In india after babri masjid demoltion the minority section people thinks they are ignored.And our judiciary failed to give punishment for babrimasjid demoltion,srikrishna commision and post godhra communal violation.
Thanks for your interest to be part of good blogging.
Hariharan Doha
மொத்தத்தில் ஒரு கொடுமை. கொடுமையிலும் கொடுமை அதற்குள்ளே சுற்றிக் கொண்டிருப்பது
http://kanavukale.blogspot.com/2008/11/blog-post_3700.html
Dear Nambi
I am really shocked to read your perception that the cause for these attacks is the Babri Masjid demolition.
Whenever these terrorist strike at will, the present ruling establishment as well as the main stream media will relate this to the domolition of Babri Masjid which is misleading and should be condemned by one and all.
When are we going to realise these are proxy wars waged by Pakistanis with or with out the consent of their government of the day.
When any goverment worth its salt will try to handle the terror issues with an iron hand, our present govt does not bother about the innumerable attacks in our country. They are happy as long as none of their close kith and kin are exposed. They have no concern for the ordinary citizens and the security personals who laid down their life in their line of duty.
We are tired of the response of the ruling establishment. They will condemn in the hardest possible words and the announcement of compensation for loss of life ranging from 5oooo to 500000 and then in a couple of days every thing will be back to normal till the next attack happens. This is the value fixed by our Govt for our lives!.
See the response of the PM, UPA chair person and the union home minister right from the day they took charge in 2004.
Not even a single conviction and punishment given during this period. They are so magnanimous that even a person convicted and sentenced by the Supreme Court of India after the due process of law has not been executed on a similar attack on our parliament.
The present ruling establishment and its various political partners are soft pedalling on these terrorists with an eye on Muslim vote bank.
Actually these politicians by their inaction are encouraging these terrorist and these people by their action and words identify the terrorist with Muslim community which should also be condemned by one and all.
For your information, only the people involved in the Gujarat blast have been identified and arrested in the last four years.
Even in this, it will take many years for conviction. In the meantime parties like Samajwadi party and Lalu's RJD will support the accused citing their religion.
Terrorist need not worry because we have Govt which cannot execute the conviction.
There is another group called Human Rights, who feel only the terrorist and the accused are human beings and they only have rights. They don't feel the rights of the innocent people affected by the terrorists!
Until we take strong measures to counter terrorism, atleast perceive to be taking strong action, these attacks will continue for ever.
Let us remember the following Thirukural (550),
Kollayin Kodiyarai Venthoruthal Paingool
kalai kattathanodu ner!
Giving a capital punishment to a deserving anti social element is equal to removing of weeds among the good crops.
This is the most important duty of a ruler.
As for your observation on the visual media, I agree with you more than 100%.
We should be concerned not about the terrorists and their attacks but rather the lack of will and lack of concern in controlling and counter the terrorism by the ruling establishment and leading political leaders. For Example, "SIMI is not a terroist organisation" spoken by a senior cabinet minister Lalu and present most important partner Mulayam singh yadav.
We can only pray the Almighty and let me add this great nation is surviving and growing not because of our politicians, in spite of these politicians!
நன்றி Hariharan Doha - If the Government goes for another Judicial Commission headed by a retired Supreme Court Justice, it may light the sequence of events, but does not identify the real culprit, which I believe the failure of secular thinking. If we do not politicize the meaning of Secularism, it will help.
நன்றி Suresh - உங்களின் மறுமொழிகளுக்கு.
Bala - I appreciate your effort in providing your comments, here is another Thirukural for your review.
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.
//
ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்.//
If you are aware of the social and non-secular elements in the country and the support factions around the world, you may understand Killing or hanging is not going to help. Better social development plans can help in reducing these kind of events over a period of time.
Almighty is going to just watch whatever happens, it's our responsibility to act with a humanistic approach.
To trace the root cause of terrorism to Babri Masjid demolition seems ill-informed and lack of thinking.
Assuming so, exactly how many people lost lives in BM demolition? And how many lives have been lost in terrorist attacks? Does it even make sense to justify with root causes? If so, why stop at BM demolition? Isn't that demolition itself then a "retaliation" for other past grievances.
As people we should learn to condemn terrorist attacks without trying to give politically-correct justifications
Post a Comment